செஞ்சி அருகே மர்ம காய்ச்சலால் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிப்பு: சிக்குன்குனியாவா என சுகாதாரத்துறை ஆய்வு

செஞ்சி அருகே மர்ம காய்ச்சலால் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிப்பு: சிக்குன்குனியாவா என சுகாதாரத்துறை ஆய்வு
Updated on
1 min read

செஞ்சி அருகே நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு ஏற்பட்டுள்ள காய்ச்சல் சிக்குன் குனியாவாக இருக்க வாய்ப்புண்டு என சுகாதாரத்துறை தெரிவித் துள்ளது.

செஞ்சி அருகே மேல் எடையாளம் கிராமத்தில் வசிக்கும் சிலருக்கு கடந்த 23ம் தேதி லேசான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர்கள் சிகிச்சை மேற்கொண்டனர். ஆனால் மறுநாள் கை, கால் வீங்கி உடலில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த காய்ச்சல் பலருக்கு பரவியுள்ளது. உடனடியாக விழுப்புரம் சுகாதாரத்துறை சார்பில் முகாம் அமைக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் பாதிக்கப் படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதற்கிடையே விக்கிர வாண்டி பகுதியில் மர்ம காய்ச்சலுக்கு பெண் ஒருவர் இறந்துள்ளார். விக்கிரவாண்டி சாம்பசிவரெட்டி பாளையம் கிராமத்தைச் சேர்ந்த திரிசங்கு என்பவரின் மனைவி குணசுந்தரி என்பவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்நிலையில் குணசுந்தரி ஞாயிற்றுக்கிழமை இரவு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

இக்கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் காய்ச் சலுக்குள்ளாகி தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின் றனர்.

தகவல் அறிந்ததும் விக்கிரவாண்டி வட்டார மருத்துவ அலுவலர் விஜயபாபு தலைமையிலான மருத்துவக்குழுவினர் கிராம பகுதியில் முகாம் அமைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் மீரா கூறும்போது: மேல் எடையாளம் கிராமத்தில் சுகாதாரத்துறையினர் முகாம் அமைத்து தடுப்பு நடவடிக்கை களை மேற்கொண்டு வருகின் றனர்.

காய்ச்சலால் பாதிக் கப்பட்டோரின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் இன்னமும் வரவில்லை. சிக்குன் குனியா பாதிப்பு போல தெரிகிறது. ஆனால் ஆய்வு முடிவு வந்தவுடன் உறுதியாக கூறமுடியும். சாம்பசிவ ரெட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த குணசுந்தரி என்ற பெண்ணுக்கு காய்ச்சலே இல்லை. வேறு நோய்க்கு அவர் சிகிச்சை பெற்றுள்ளார். அக்கிராமத்தில் மருத்துவக்குழுவினர் முகாம் அமைத்துள்ளனர் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in