Published : 11 Mar 2018 07:55 AM
Last Updated : 11 Mar 2018 07:55 AM

மாணவி அஸ்வினி உடல் தகனம்: கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் அஞ்சலி

சென்னையில் கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி அஸ்வினி யின் உடலைப் பெற மறுத்து உறவினர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்களை போலீஸார் சமாதானப்படுத்தி உடலை ஒப்படைத்தனர். உறவினர்கள், பொதுமக் கள் அஞ்சலிக்குப் பிறகு உடல் தகனம் செய்யப்பட்டது.

சென்னை மதுரவாயல் தனலட்சுமி நகரைச் சேர்ந்தவர் அஸ்வினி (19). மேற்கு கே.கே.நகரில் உள்ள மீனாட்சி கல்லூரி யில் பி.காம். முதலாண்டு படித்து வந்தார்.

கடந்த 9-ம் தேதி பிற்பகல் கல்லூரி முடிந்து வெளியே வந்த அஸ்வினியை, அழகேசன் (29) என்பவர் கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்தார். தப்பி ஓட முயன்ற அழகேசனைப் பிடித்து பொதுமக்கள் சரமாரி யாக தாக்கினர். இதில் காயம் அடைந்த அவர் சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்ததாக தெரியவந்துள்ளது.

பிரேதப் பரிசோதனை

இதற்கிடையில், அஸ்வினி யின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. நேற்று காலை 10.30 மணிக்கு தொடங்கிய பரிசோதனை சுமார் ஒரு மணி நேரம் நடந்தது.

உடலை வாங்க மறுப்பு

வெளியே காத்திருந்த உறவினர்கள், சடலத்தை வாங்க மறுத்து, போலீஸாருக்கு எதிராகவும், அழகேசன் குடும்பத்துக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

‘அழகேசனை மக்கள் முன்னிலையில் தூக்கில் போட வேண்டும். இது குற்றம் செய்யும் அனைவருக்கும் ஒரு பாடமாக இருக்கும். அஸ்வினிக்கு ஏற்பட்ட நிலைமை வேறு எந்த பெண்ணுக்கும் ஏற்படக்கூடாது. அழகேசன் குடும்பத்தினர் நேரில் வந்து எங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று அவர்கள் கோஷமிட்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

போலீஸார் சமாதானப் பேச்சு

இதையடுத்து, கே.கே.நகர் ஆய்வாளர் பாலமுரளி, கீழ்ப்பாக்கம் ஆய்வாளர் பாலன் ஆகியோர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். கொலையாளிக்கு அதிகபட்ச தண்டனை வாங்கித் தர சட்டரீதியாக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதை ஏற்றுக்கொண்ட உறவினர்கள், போராட்டத்தை கைவிட்டனர்.

இதைத் தொடர்ந்து, உடல் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அஸ்வினி உடலைப் பார்த்து அவரது தாய் கதறி அழுதது நெஞ்சை உலுக்குவதாக இருந் தது.

கண்ணீர் அஞ்சலி

மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் அஸ்வினி யின் உடல் மதுரவாயலில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு உறவினர்கள், பகுதி மக்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் உட்பட என நூற்றுக்கணக்கானோர் திரண்டு அஞ்சலி செலுத்தினர். பின்னர் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, போரூர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. ஊர்வலப் பாதை முழுவதும் ஏராளமான பொதுமக்கள் திரண்டு நின்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x