Published : 24 Mar 2018 08:11 AM
Last Updated : 24 Mar 2018 08:11 AM

ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணையில்தான் உண்மை தெரியவரும்: டிடிவி. தினகரன் கோரிக்கை

ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தினால்தான் உண்மை தெரியவரும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார்.

தஞ்சாவூரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறிய தாவது:

ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் ஒருவரின் மனைவியை துணைச் செயலராக நியமித்து உள்ளனர். இனி, நியாயமான முறையில் விசாரணை ஆணையம் செயல்படுமா? என்பது சந்தேகமே. சிபிஐ விசாரணை நடத்தினால்தான் உண்மை தெரியவரும்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவின் வாக்குமூலம் என்று ஊடங்களில் வெளிவந்த செய்திகள் தவறானவை என விசாரணை ஆணையம் தெரிவித்து இருக்கிறது. இப்படி அவசரமாக மறுப்பு தெரிவித்தது ஏன்? விசாரணை ஆணையத்தின் செயல்பாடு கேள்விக்குறியாக உள்ளது.

சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது கண்காணிப்பு கேமராவை நாங்கள் அணைத்து வைக்க சொல்லவில்லை. எதற்காக கேமராக்களை அணைத்து வைத்தார்கள் என்று மருத்துவமனை நிர்வாகத்திடம்தான் கேட்க வேண்டும். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அப்போது, இந்த ஆட்சி இருக்குமா என்பது தெரியும். சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும்போது, எங்கள் ஸ்லீப்பர் செல்கள் யார் என்பதை அறிவீர்கள்.

இவ்வாறு தினகரன் தெரி வித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x