தமிழக மீனவர்கள் காவல் அக்.6 வரை நீட்டிப்பு: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

தமிழக மீனவர்கள் காவல் அக்.6 வரை நீட்டிப்பு: இலங்கை நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

தமிழக மீனவர்கள் 25 பேரின் காவலை அக்டோபர் 6 வரை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 11ம் தேதி நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த பூம்புகார், நாகை மாவட்டங்களைச் சேர்ந்த 25 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களது காவல் இன்றுடன் நிறைவு பெற்றதை அடுத்து, தமிழக மீனவர்களின் காவலை அக்டோபர் 6-ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் இலங்கை உத்தரவிட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in