Published : 06 Mar 2018 05:35 PM
Last Updated : 06 Mar 2018 05:35 PM

தெருவிளக்கு, சாலை, குடிநீர், குப்பை, நாய் தொல்லைக்கு புகார் அளிக்க நம்ம சென்னை மொபைல் ஆப்: தற்போது ஐபோனிலும்...

பெருநகர சென்னை மாநகராட்சியின் நம்ம சென்னை என்ற புதிய செயலி (Namma Chennai app) தற்போது ios(iphone) என்ற மென்பொருள் மூலமாகவும் பதிவிறக்கம் செய்து, புகார்களை பதிவு செய்யலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் கருத்து தெரிவிக்கும் வண்ணம் நம்ம சென்னை என்ற புதிய செயலி (Namma Chennai app) பெருநகர சென்னை மாநகராட்சியால் கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது.

மேலே குறிப்பிடப்பட்ட செயலியானது (Android) கைபேசி உபயோகிப்பாளர்களுக்கு பயன்படும் வண்ணம் வசதி செய்யப்பட்டது. இதுவரை நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கைபேசி உபயோகிப்பாளர்களால் பதிவிறக்கம் செய்துள்ளனர். தற்போது ios (iphone) பயன்பாட்டாளர்களும் பதிவிறக்கம் செய்யும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கைபேசி செயலி (Namma Chennai app) மூலமாக பெறப்படும் மனுக்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உடனுக்குடன் அனுப்பப்பட்டு, அதன்மீது மேற்கொண்ட நடவடிக்கை விவரங்களை மனுதாரருக்கு கைபேசி செயலி மூலமாகவே உடனுக்குடன் தெரிவிக்கும் வண்ணம் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

உதாரணமாக, தெருவிளக்கு பராமரிப்பு, குப்பை அகற்றுதல், நாய் தொல்லை, சாலைப் பணிகள் பராமரிப்பு, மழைநீர் வடிகால் பராமரிப்பு போன்ற பொதுமக்களின் புகார்கள் கைபேசி செயலி மூலமாக பதியப்பட்டு, புகார்கள் அனைத்தும் எல்லைக்குட்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று பொதுமக்களின் குறைகள் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தற்போது நம்ம சென்னை செயலியை 4221 கைபேசி பயன்பாட்டாளர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். புகார்கள் உடனுக்குடன் ஓரிரு நாளில் தீர்க்கப்படுவதாக மாநகராட்சி சார்பில் கூறப்பட்டாலும் புகார்களுக்கு எவ்வித பதிலும், தீர்வும் கிடைப்பதில்லை என்று பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x