Last Updated : 22 Sep, 2014 12:03 PM

 

Published : 22 Sep 2014 12:03 PM
Last Updated : 22 Sep 2014 12:03 PM

பொதுமக்கள் அளித்த நன்கொடையால் வளரும் அரசு பள்ளி: நூல்கள், புரோஜெக்டர், விளையாட்டு சாதனங்கள் அளிப்பு

புதுச்சேரி அருகேயுள்ள ஆண்டி யார்பாளையத்தில் அரசு தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் நூலகம் அமைக்க விரும்பிய ஆசிரியர்கள் அரசிடம் உதவி எதிர்பாராமல் தாங்களாகவே களத்தில் இறங்கினர்.

அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் உதவிகேட்டனர். அவர்கள் தங்களது வீடுகளில் படித்து முடித்து வைத்திருந்த கல்வி, கலாச்சாரம், அறிவியல், வரலாறு, அறிவியலின் படைப்புகள், புதுமைகள் தொடர்பான பல்வேறு நூல்களை இலவசமாக வழங்கினர்.

இதனைக்கொண்டு ஆசிரியர்கள் பள்ளியில் ஒரு அறையை ஒதுக்கி நூல கத்தை உருவாக்கினர். இந்த நூல கத்தை பார்வையிட்ட பொது மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் மேலும் பல உதவிகளை செய்யத்தொடங்கினர்.

இதுதொடர்பாக பள்ளி தலைமை யாசிரியர் ஜெயந்தி, நூலக பொறுப்பாளர் பாட்சா, ஆசிரியர்கள் கயல்விழி, சுகுணா ஆகியோர் கூட்டாக தி இந்துவிடம் கூறும்போது:

எங்கள் அரசு தொடக்கப்பள்ளியில் எல்கேஜி முதல் 5ம் வகுப்பு வரை உள்ளது. தற்போது 1, 2ம் வகுப்புகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை புதுவை அரசு நடப்பு கல்வியாண்டில் அறிமுகம் செய்துள்ளது. எங்கள் பகுதி தமிழகத்தின் எல்லைப்பகுதியில் உள்ளது. இதனால் புதுவை, தமிழகம் பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் படிக்கின்றனர். தற்போது 1, 2ம் வகுப்புகள் ஆங்கிலவழியாகியுள்ளது. அடுத்த ஆண்டு 5ம் வகுப்பு வரை ஆங்கில வழிக்கல்வியாக மாற்றம் செய்யப்பட உள்ளது.

எங்கள் பள்ளியில் படிக்கும் மாண வர்கள் தங்கள் அறிவை மேம்படுத்த நூலகம் அமைக்க முயற்சி எடுத்தோம். வீட்டில் படித்து முடித்துவைத்துள்ள புத்தக ங்களை தானமாக தாருங்கள் என்று நோட்டீஸ் அடித்து கிராமங்களில் வினியோ கம் செய்தோம். தொடக்கத்தி லேயே நூற்றுக்கணக்கான புத்தகங்கள் வரத்தொடங்கியது. தற்போது இரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள் எங்களிடம் சேர்ந்துள்ளது. இந்த விஷயத்தை கேள்விப்பட்டு தற்போது பலரும் அஞ்சல் மூலம் புத்தகங்களை அனுப்ப தொடங்கியுள்ளனர்.

பள்ளியின் ஒரு அறையை நூலகமாக மாற்றி அமைத்துள்ளோம். அறிவியல், கணிதம், வரலாறு, தேசத்தலைவர்களின் புத்தகங்கள் என அனைத்து தரப்பு புத்தகங்களும் நூலகத்தில் உள்ளன.

உணவு பழக்கங்கள், விஞ்ஞானிகள் செய்த சாதனைகள், இதுவரை பதவியில் இருந்துள்ள குடியரசுத்தலைவர்கள், பிர தமர்கள் என்று பயனுள்ள தகவல்கள் அடங்கிய அட்டைகளை மாணவர்களின் திறனை மேம்படுத்துவதற்காக நூலகத்தில் தொங்கவிட்டுள்ளோம்.

வாரத்தில் ஒரு வகுப்பை நூலக வகுப்பாக மாற்றியுள்ளோம்.

எங்களது இந்த முயற்சிக்கு துணை ஆய்வாளர் மீனாட்சி சுந்தரம் ஊக்கம் அளித்தார். நூலகம் திறக்கப்பட்டதை அறிந்து பலரும் பள்ளியை நேரில் வந்து பார்த்தனர். அவர்கள் மாணவர்களுக்கு ஏதாவது செய்ய விரும்பினர். கல்வி, நூலகத்துடன் விளையாட்டும் முக்கி யம் என அவர்கள் கருதினர். அத னால் விளையாட்டு சாதனங்களை நன்கொடையாக தரத்தொடங்கினர்.

டேபிள் டென்னிஸ் ஆடுகளம், ஊஞ்சல், சறுக்கு விளையாட்டு, சீசா, கேரம்போர்டு, செஸ் என பல்வேறு விளையாட்டு சாதனங்களை வாங்கி க்கொடுத்துள்ளனர். எல்லாவற்று க்கும் மேலாக மாணவர்களுக்கு உயர்ந்த தொழில்நுட்பத்தில் கல்வி கற்பிக்கும் நோக்கில் புராஜெக்டர் ஒன்றை பரிசாக தந்துள்ளனர்.

இதனால் மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பல்வேறு விஷ யங்களை காட்சிகள் மூலம் எளிதாக விளக்கி கூறமுடிகிறது. நூலகம் அமைக்க லாம் என்ற எங்களது சிறிய முயற்சியா லும் அதற்கு மக்கள் கொடுத்த ஆதரவா லும் மாணவர்கள் பெரிதும் பயன் அடை ந்துள்ளனர் என்கின்றனர் ஆர்வமுடன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x