Published : 27 Mar 2018 11:22 AM
Last Updated : 27 Mar 2018 11:22 AM

நாதெள்ளா நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.35 கோடி சொத்துக்களின் ஆவணம் பறிமுதல்: சீட்டு கட்டியவர்களுக்கு விரைவில் நிவாரணம்

நாதெள்ளா ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் ரூ.35 கோடி அசையாச் சொத்துக்களின் ஆவணங்களை உள்துறை அமைச்சகத்திடம் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் ஒப்படைத்துள்ளனர்.

நாதெள்ளா ஜுவல்லர்ஸில் தங்க நகை சேமிப்பு திட்டத்தில் சேர்ந்தவர்களுக்கு நகையை யும் கொடுக்காமல், செலுத்திய பணத்தையும் கொடுக்காமல் நாதெள்ளா ஜுவல்லர்ஸ் ஏமாற்றியது. இதனால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் கொடுத்த புகார்களின்பேரில், பொருளா தார குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுமார் 2 ஆயிரம் கொடுத்த புகார்களின்பேரில், ரூ.31 கோடி வரை சீட்டு மோசடி நடந்திருப்பதை போலீஸார் கணக்கீடு செய்துள்ளனர்.

இந்நிலையில், நாதெள்ளா நகைக்கடைக்கு சொந்தமான ரூ.35 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களையும் அதற்கான ஆவணங்களையும் கணக்கீடு செய்து, தமிழக உள்துறையிடம் அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர். தமிழக உள்துறையின் உத்தரவு பெற்ற பிறகு, சீட்டு கட்டி பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பணம் திருப்பி தரப்படும் என போலீஸார் தெரிவித்துள் ளனர்.

ரூ.378 கோடி வங்கிக் கடன் மோசடி புகாரில் சிபிஐயும் நாதெள்ளா ஜுவல்லர்ஸ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x