

நாடாளுமன்றத் தேர்தலில் வன்னியர்கள் ‘நோட்டா’வுக்கு வாக்களிக்க வேண்டும் என்று வன்னியர் சங்கத் தலைவர் ஏ.கே.நடராசன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் உள்ள அனைத்து முன்னணி அரசியல் கட்சிகளும் மாநிலத்தின் தனிப் பெரும்பான்மை கொண்ட வன்னியர் சமுதாயத்தைப் புறக்கணித்து வருகின்றன. கல்வி, வேலைவாய்ப்புகளில் தனி ஒதுக்கீடு அளிக்க வேண்டும், வன்னியரின் அனைத்து பொதுச் சொத்துகளை ஒருங்கிணைத்து சட்டரீதியாக ‘வன்னியர் பொதுச் சொத்து வாரியம்’ அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் மாநிலத்தில் ஆட்சி செய்த அரசுகளால் புறந்தள்ளப்பட்டு வருகின்றன.
வன்னியர்களின் கோரிக்கை களை புறந்தள்ளிவிட்டு, அவர் களது வாக்குகளை மட்டும் அரசியல் கட்சிகள் தேடி வருகின் றன. அப்படிப்பட்ட கட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாடாளுமன்றத் தேர்தலில் ‘நோட்டா’ பொத்தானை வன்னியர்கள் பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.