Published : 12 Mar 2018 09:06 AM
Last Updated : 12 Mar 2018 09:06 AM

வனப் பகுதியில் விமானம் மூலம் மீட்பது சிக்கல்: தேனி வன ஆர்வலர் தகவல்

வனப் பகுதியில் தீயில் சிக்குபவர்களை விமானம் மூலம் மீட்பது சிக்கல் என்று தேனி வன ஆர்வலர் ஜலாலுதீன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது: வனப் பகுதியில் ஏற்படும் தீயில் சிக்கியவர்களை விமானம் மூலம் மீட்பது என்பது சிரமமான காரியம். இதற்கு காரணம் விமானம் குறிப்பிட்ட தூரத்துக்கு தான் போக முடியும். விமானம் மூலம் மீட்பது என்பது இயலாத காரியம். அடர்ந்த காட்டுப்பகுதியில் விமானம் மூலம் செல்ல முடியாது.

கர்நாடக மாநிலம் பந்திப்பூரில் மாணவர்கள் ஆலோசனை முகாம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கிய மாணவர்களை மீட்க மலைவாழ் மக்கள் பெரிதும் உதவினர்.

வேட்டை தடுப்பு காவலர்களை மட்டும் வைத்து தீயை தடுக்க முடியாது. ஏனெனில் வனத் திட்டங்கள் அனைத்தும் மலைவாழ் மக்கள் உதவியுடன்தான் செயல்படுத்தப்படுகிறது. எனவே அவர்களுக்குதான் இந்த நேரத்தில் எவ்வாறு செயல்படுவது என்பது தெரியும். இருப்பினும் இவர்கள் மட்டும் போதாது. தற்போது நேரத்தை வீணாக்காமல் வெளியாட்களையும் இணைத்து செயல்பட்டால்தான் மற்ற பகுதிகளுக்கும் தீ பரவாமல் தடுக்க முடியும்.

இவ்வாறு வன ஆர்வலர் ஜலாலுதீன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x