Published : 04 Mar 2018 11:50 AM
Last Updated : 04 Mar 2018 11:50 AM

சிட்லபாக்கத்தில் ஊராட்சி வாரியாக மக்கள் குறைகேட்பு கூட்டம்

சிட்லபாக்கத்தில் ஊராட்சி வாரியாக குறைகேட்புக் கூட்டம் நேற்று நடந்தது. இதில், எம்.பி. மற்றும் அதிகாரிகள் மக்கள் குறைகளைக் கேட்டனர்.

புனித தோமையார் மலை வட்டாரத்தில் மொத்தம், 15 கிராம ஊராட்சிகள் உள்ளன. இதில், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றம் தொகுதிக்கு உட்பட்ட முடிச்சூர், மதுரைப்பாக்கம், திருவஞ்சேரி, பொழிச்சலூர், அகரம்தேன், திரிசூலம், மூவரம்பேட்டை, கவுல்பஜார் போன்ற ஊராட்சிகள் உள்ளன. தற்போது இவற்றில் தலைவர், வார்டு உறுப்பினர்கள் இல்லை. இதனால் இவற்றில் நிலவும் குடிநீர், தெருவிளக்கு பிரச்சினை, சாலை வசதி போன்ற குறைகளைக் கேட்டு நிவர்த்தி செய்ய, ஸ்ரீபெரும்புதூர் எம்.பி. கே.என்.ராமச்சந்திரன் தலைமையில், புனிததோமையார் மலை ஒன்றிய அலுவலகத்தில் குறைகேட்புக் கூட்டம், நேற்று நடந்தது.

இதில் குடிநீர் வடிகால் வாரியம், மின்வாரியம், ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். குப்பைக் கிடங்கை நிரந்தரமாக அகற்றுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள், பொதுமக்கள் சார்பில் மனுக்களாக வழங்கப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்டு எம்.பி. ராமச்சந்திரன் பேசும்போது, “பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக பொதுமக்கள் வழங்கிய மனுக்கள், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். அடிப்படை பிரச்சினைகளான தெரு விளக்கு, குடிநீர், சாலை பணிகள் உடனடியாக முடித்து தரப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x