Published : 18 Mar 2018 05:14 PM
Last Updated : 18 Mar 2018 05:14 PM

தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினை, புற்றுநோய் ஏற்படாது: குழந்தைகள் நல மருத்துவர் தகவல்

தாய்ப்பால் கொடுக்கும் பெண் களுக்கு மாதவிடாய் பிரச்சினை, மார்பக ப் புற்றுநோய் ஏற்படாது என, குழந்தைகள் நல மருத்துவர் நிஷா கலையரசன் தெரிவித்தார்.

வேலூர் முத்துரங்கம் அரசினர் தன்னாட்சிக் கல்லூரியில் ‘‘தாய்ப் பால் மற்றும் ஊட்டச் சத்து குழந்தைகள்’’ என்ற தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கம் நேற்று முன்தினம் நடந்தது.

கல்லூரியில் உள்ள சத்துணவு பரிமாறல் நிர்வாகம், பத்திய உணவியல் துறை சார்பில் நடந்த பயிலரங்குக்கு கல்லூரி முதல்வர் சுகிர்த ராணி ஜூலினா தலைமை தாங்கினார். கல்லூரியின் விலங்கியல் துறைத் தலைவர் சந்திர பாபு முன்னிலை வகித்தார். பத்திய உணவியல் துறைத் தலைவர் தெய்வசிகாமணி ரேவதி வரவேற்றார்.

பயிலரங்கில் அரியூர் நாராயணி மருத்துவமனை குழந்தைகள் மற்றும் பச்சிளங் குழந்தைகள் நல மருத்துவர் நிஷா கலையரசன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

அப்போது அவர் பேசும்போது, ‘‘அனைத்து சத்துக்களையும் உள்ளடக்கிய எளிமையான உணவு தாய்ப் பால் . தாய்ப் பால் இல்லாத குழந்தைகள் அதிக நோய் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். தாய்ப் பால் என்பது இயற்கை மனிதனுக்கு அளித்த பொக்கிஷமாகும்.

தாய்ப் பால் கொடுப்பதால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம் உண்டாகிறது. குழந்தை பிறந்து 6 மாதங்கள் வரை கட்டாயம் தாய்ப் பால் கொடுக்கவேண்டும். தாய்ப் பால் கொடுக்கும் பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினை, கருப்பைக் கட்டிகள், மார்பகக் கட்டிகள் மற்றும் புற்றுநோய் ஏற்படாது. தாய்ப் பால் கொடுப்பதை ஒவ்வொரு தாயும் தலையாய கடமையாகக் கருதவேண்டும்’’ என்றார். நிகழ்ச்சியில், உணவியல் துறை பேராசிரியர்கள் சினி எழிலரசி, அனிதா, கலையரசி, பத்மாவதி மற்றும் மாணவ, மாணவி கள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x