Published : 13 Mar 2018 09:32 am

Updated : 13 Mar 2018 15:29 pm

 

Published : 13 Mar 2018 09:32 AM
Last Updated : 13 Mar 2018 03:29 PM

மகளை பறிகொடுத்த திட்டக்குடி அதிமுக பிரமுகர்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அதிமுக ஜெ. பேரவை செயலாளர் செல்வராஜ். இவருக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர். இதில் மூத்தமகள் கலைச்செல்வி திருமணமானவர், மகன் கமல்ராஜ் அதிமுக மாணவரணி துணைச் செயலாளராக உள்ளார். இளைய மகள் சுபா (28).

சென்னையை அடுத்த தாம்பரத்தில் மகளிர் விடுதியில் தங்கியபடி, சோழிங்கநல்லூரில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை செய்துவந்துள்ளார். இவர் துப்பாக்கிச் சுடும் பயிற்சியை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

சென்னையில் உள்ள ஒரு ஏஜென்ஸி மூலம், தேனி மாவட்டத்தில் உள்ள குரங்கணி மலைக்குச் செல்வதாக கடந்த வெள்ளிக்கிழமை தனது சக தோழிகளிடம் கூறிவிட்டுச் சென்றதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், நேற்று முன் தினம் அவரது தந்தை செல்வராஜூக்கு, தேனி ஆட்சியர் அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்துள்ளது. நேரில் சென்ற செல்வராஜிடம், அவரது மகள் தீ விபத்தில் சிக்கிஇறந்துவிட்ட செய்தியை கூறியுள்ளனர்.

உயிரிழந்த சுபாவின் தந்தை செல்வராஜ் கூறும்போது, “சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் என் மகள் பணிபுரிந்தாள். அங்கிருந்தே மலையேற்றத்துக்கு அழைத்துச் செல்வதாகத் தெரிவித்தனர். அதை நம்பியே நாங்களும் அனுப்பி வைத்தோம். தற்போது எங்கள் மகள் சடலமாகத் திரும்பியுள்ளார்” என்றபடி கதறியழுதார்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author