Published : 11 Mar 2018 10:39 am

Updated : 11 Mar 2018 10:56 am

 

Published : 11 Mar 2018 10:39 AM
Last Updated : 11 Mar 2018 10:56 AM

காவிரி பிரச்சினைக்காக மக்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய தயார்: அன்புமணி ராமதாஸ் எம்.பி. தகவல்

காவிரி பிரச்சினைக்காக எம்.பி. பதவியை ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கூறினார்.

கோவையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியது: கர்நாடக மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய பாஜக அரசு தாமதம் செய்கிறது. வரும் 29-ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால், 30-ம் தேதிக்குப் பின்னர் மிகப் பெரிய போராட்டம் நடைபெறும். மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்துவர். காவிரி பிரச்சினைக்காக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும். அப்போதுதான் அரசியல் நெருக்கடி உண்டாகும். முதல் நபராக நான் ராஜினாமா செய்யத் தயாராக உள்ளேன்.

காவிரி பிரச்சினைக்காக தமிழக சட்டப்பேரவையைக் கூட்டுவதால் எந்தப் பயனும் இல்லை. இந்த விவகாரத்தில் தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சித் தலைவர்களை பிரதமர் மோடி சந்திக்க மறுத்தது, தமிழகத்துக்கு மிகப் பெரிய அவமானம். இவ்வாறு அன்புமணி கூறினார்.


Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like


More From This Category

More From this Author