Published : 22 Sep 2014 11:19 AM
Last Updated : 22 Sep 2014 11:19 AM

கொங்கு நாடு ஜனநாயக கட்சியில் பிளவு: புதிய கட்சி தொடங்குவதாக நிர்வாகிகள் அறிவிப்பு

கொங்கு நாடு ஜனநாயக கட்சியில் இருந்து விலகியுள்ள முக்கிய நிர்வாகிகள் புதிய கட்சி தொடங்கவுள்ளதாக ஈரோட்டில் நேற்று தெரிவித்துள்ளனர்.

கடந்த 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு பின், பெஸ்ட் ராமசாமி தலைமையில் இயங்கி வந்த கொங்குநாடு முன்னேற்றக் கழகத்தில் இருந்து, அங்கு பொதுச்செயலாளராக பதவி வகித்து வந்த ஈஸ்வரன் தனிக் கட்சி தொடக்கினார். கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி என்ற பெயரில் அக்கட்சி இயங்கி வருகி றது. கடந்த நாடாளுமன்றத் தேர்த லில், பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் இடம்பெற்று, தேர்தலி லும் போட்டியிட்டார் ஈஸ்வரன்.

கடந்த பிப்ரவரி 2-ம் தேதி பெஸ்ட் ராமசாமியிடம் இருந்து பிரிந்து வந்த ஜி.கே.நாகராஜ், கொங்கு நாடு ஜனநாயக கட்சி என்ற பெயரில் புதிய கட்சி யைத் தொடங்கினார். தற்போது இக்கட்சியிலும் பிளவு ஏற்பட்டுள்ளது. கட்சித்தலைவர் ஜி.கே.நாகராஜின் போக்கை கண்டித்து தற்போது அக்கட்சியில் இருந்து மாநில பொருளாளர் ஆடிட்டர் சோமு தலைமையில் 45 மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூண்டோடு விலகியுள்ளதாக அறிவித்துள்ளனர். இது குறித்து அக்கட்சியில் இருந்து விலகிய ஆடிட்டர் சோமு உள்ளிட்ட நிர்வாகிகள் கூறியதாவது:

கட்சி நிர்வாகிகளை மதிக்காமல் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்து ஜி.கே.நாகராஜ் அறிவிக்கிறார். கட்சியின் நிதிநிலையை மேம்படுத்துவதற் காக நாங்கள் வகுத்து தந்த திட்டங்களை செயல்படுத்த மறுக்கிறார். கொள்கைகளுக்கு முரண்பாடாக செயல்பட்டு, சுயநலத்துக்காக கட்சியை தன் வழியில் கொண்டு செல்வதால், அவரது செயல்பாட்டில் கட்சியின் நிர்வாகிகள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். எனவே மொத்தமுள்ள 6 மாநில நிர்வாகிகளில் 5 மாநில நிர்வாகிகள் உட்பட ஈரோடு, தருமபுரி, நாமக் கல், சேலம், திருப்பூர் மாவட்டங்களின் நிர்வாகிகள், பெருந்துறை, சென்னிமலை, அரூர், திருச்செங்கோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி, பெண்ணாகரம், மொரப்பூர், கோபி, பாலக்கோடு போன்ற ஒன்றியத்தை சேர்ந்த நிர்வாகிகள் 45 பேர், தற்போது கட்சியில் இருந்து அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளில் இருந்தும் விலகி விட்டனர்.

தற்போது இயங்கிவரும் ஈஸ்வரன் மற்றும் பெஸ்ட் ராம சாமி தலைமையிலான கட்சியில் நாங்கள் இணைய மாட்டோம். அடுத்த கட்டமாக புதிய கட்சி தொடங்குவது குறித்து அதிருப்தியாளர்களுடன் கலந்தாலோசித்து வருகிறோம்.

இவ்வாறு ஆடிட்டர் சோமு தெரிவித்தார்.

இது குறித்து கொங்குநாடு ஜனநாயகக் கட்சித் தலைவர் ஜி.கே.நாகராஜிடம் கேட்டபோது, கட்சிப் பணியை முறையாக செய்யாத மாநில அமைப்பாளர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டது. இதற்கு அவர்கள் பதில் அளிக்கவில்லை. இதையடுத்து அவர்கள் கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளனர். அவர்கள் விலகியதால் கட்சிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x