Published : 25 Mar 2018 10:32 AM
Last Updated : 25 Mar 2018 10:32 AM

8 ஆண்டுகளுக்குப் பின்னர் சேலம் - சென்னை இடையே இன்றுமுதல் விமான சேவை: முதல்வர் தொடங்கி வைக்கிறார்

சேலத்தில் இருந்து 8 ஆண்டுகளுக்குப் பின்னர் சென்னைக்கு மீண்டும் இயங்க உள்ள விமான சேவையை முதல்வர் பழனிசாமி இன்று சேலத்தில் தொடங்கி வைக்கிறார்.

ஓமலூரை அடுத்த காமலாபுரத்தில் 165 ஏக்கர் பரப்பில் 1993-ம் ஆண்டு விமான நிலையம் அமைக்கப்பட்டது. முதன் முதலில் சேலத்தில் இருந்து சென்னைக்கு என்இபிசி நிறுவனம் விமானத்தை இயக்கியது. பல்வேறு காரணங்களால் விமான சேவை நிறுத்தப்பட்டது, பின்னர் 2009-ல் மீண்டும் சேலத்தில் இருந்து விமான சேவை தொடங்கப்பட்டது. போதிய அளவில் பயணிகள் வராததால் 2010-ம் ஆண்டு விமான சேவை நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், மத்திய அரசு சார்பில் சிறு நகரங்களை விமான சேவை மூலம் இணைக்கும் ‘உடான்’ திட்டம் அறிவிக்கப்பட்டது. இதன்படி சேலத்தில் இருந்து 8 ஆண்டுகளுக்குப் பின்னர் விமான சேவை இன்று (25-ம் தேதி) முதல் தொடங்கப்படுகிறது. ட்ரூ ஜெட் விமான நிறுவனம் சேலம்- சென்னை இடையே 72 இருக்கைகள் கொண்ட விமானத்தை இயக்கவுள்ளது.

விமான சேவையை முதல்வர் பழனிசாமி சேலத்தில் இன்று தொடக்கிவைக்கிறார்.

2 மாணவர்கள் பயணம்

இதனிடையே, சென்னையில் இன்று காலை 9.50 மணிக்கு புறப்படும் விமானம் காலை 10.40 மணிக்கு சேலம் வந்தடைகிறது. காலை 11 மணிக்கு சேலத்தில் புறப்படும் முதல் விமானத்துக்கு முதல்வர் பழனிசாமி கொடி அசைத்து சேலத்தின் விமான சேவையை தொடங்கி வைக்கிறார். இந்த விமானத்தில் வறுமைகோட்டுக்கு கீழ் உள்ள 2 மாணவர்கள் முதல்வர் சார்பில் சென்னைக்கு பயணம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x