Published : 27 May 2019 07:51 AM
Last Updated : 27 May 2019 07:51 AM

நதிகள் இணைப்பு குறித்த அறிவிப்பு: நிதின் கட்கரிக்கு முதல்வர் நன்றி

நதிகள் இணைப்பு குறித்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்புக்கு முதல்வர் கே.பழனிசாமி நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் நீர் ஆதாரங் களை நிரந்தரமாக பெருக்கும் வகையில் கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கே.பழனிசாமி கோரிக்கை வைத்திருந்தார். இத்திட்டத்தை தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், மத்திய தரைவழி, கப்பல் போக்குவரத்து மற்றும் நீர் வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, கோதாவரி – காவிரி நதிகள்இணைப்புத் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று ஏற்்கெனவே அறிவித்தார்.

தற்போது நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது கோதாவரி – காவிரி இணைப்பு திட்டம் மூலம் காவிரிக்கு தண்ணீர் கொண்டு வரப்படும் என்று முதல்வர் பழனிசாமி வாக்குறுதி அளித்தார்.

இந்நிலையில், “தமிழ்நாட்டுமக்கள் எங்களைப் புறக்கணித்தாலும் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் கோதாவரி – கிருஷ்ணா நதிநீர் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றுவதுதான் எங்கள் முதல் வேலை” என்று மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்ததாக தமிழகபாஜக ட்விட்டர் பக்கத்தில்கூறப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை நிறைவேற்றுவதின் மூலம் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம் உட்பட 4 மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு பிரச்சினைகள் முடிவுக்கு வரும் என்றும்,  காவிரியுடன் கோதாவரி இணைக்கப்பட்டுவிட்டால் தமிழ்நாட்டின் தென்கோடி வரை தண்ணீர் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், “கோதாவரி - காவிரி நதிகள் இணைப்புத் திட்டம் குறித்து அறிவிப்பு வெளியிட்ட நிதின் கட்கரிக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத்தெரிவித்துக் கொள்கிறேன். தற்போதைய நிலையில் இத்திட்டம்மிகவும் அவசியமானதாகும்.

இதன்மூலம் தமிழ்நாட்டில் தண்ணீர் பற்றாக்குறையைப் பெருமளவு போக்க முடியும்.

தமிழகத்தின் நீண்டகால கோரிக்கையான கோதாவரி – கிருஷ்ணா – பெண்ணாறு – காவிரி நதிகள் இணைப்பு மூலம் தமிழ்நாட்டின் தண்ணீர்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்த நிதின் கட்கரிக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று முதல்வர் கே.பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x