Last Updated : 25 May, 2019 12:00 AM

 

Published : 25 May 2019 12:00 AM
Last Updated : 25 May 2019 12:00 AM

என்னவாகும் எல்லை தாண்டிய திமுக வாக்குறுதிகள்?

மக்களவைத் தேர்தலையொட்டி திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாட்டின் மிக முக்கியமான அனைத்துப் பிரச்சினைகளையும் திமுக தேர்தல் அறிக்கை தொட்டுப் பார்த்தது. அரசு ஊழியர்களின் நீண்டகால கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டுவர வலியுறுத்துவோம் என்று கூறப்பட்டது.

இந்தியப் பொருளாதாரத்தை மீட்க வல்லுநர் குழு அமைத்தல், கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருதல், நீட் தேர்வை ரத்து செய்தல், கல்விக்கடன் ரத்து, மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ், சுங்கச்சாவடி கட்டணம் ரத்து, காவிரி டெல்டாவை பாதுகாக்க வேளாண் மண்டலம், பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை, வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை, இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை, வருமான வரி விலக்கை ரூ.8 லட்சமாக உயர்த்துதல், மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தை 150 நாளாக அதிகரித்தல், ஒரு கோடி சாலைப் பணியாளர் நியமனம், சேதுசமுத்திர திட்டம், மாணவர்களுக்கு இலவச ரயில் பயணச் சலுகை என பல வாக்குறுதிகள் அதில் இடம்பெற்று இருந்தன.

ஆனால், இவை அனைத்தும் மத்திய அரசின் அதிகார எல் லைக்கு உட்பட்டவை. மத்திய அரசால் மட்டுமே செய்யக்கூடிய விஷயத்தை வெறும் 20 தொகுதி களில் மட்டுமே போட்டியிடும் மாநிலக் கட்சியான திமுக தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிப்பது எந்த அளவுக்கு சாத்தி யம் என்று அப்போதே விமர் சனம் எழுந்தது.

காங்கிரஸ் கட்சி இந்த அறிக் கையை வெளியிட்டிருந்தால்கூட ஓரளவு ஏற்றுக்கொள்ள முடியும். அல்லது காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பொது தேர்தல் அறிக்கை யாக வெளியிட்டிருந்தால்கூட பொருத்தமாக அமையும். ஆனால், திமுக தனித்து இத்தகைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருப்பது ஏற்கும்படியாக இல்லை. குறிப் பாக, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை நிர்ணயத்தை பழையமுறைக்கு மாற்றுவோம் என்று திமுக கூறியது. மத்திய அரசின் அதிகார வரம்பில் வரும் விஷயங்களை திமுக எப்படி செய்ய முடியும் என விமர்சிக்கப்பட்டது.

புதிய ஓய்வூதியத் திட்டம், சுங்கச் சாவடிகள், ஜிஎஸ்டி, பெட்ரோல், டீசல் விலை நிர்ணய முறை ஆகியவற்றால் அரசு ஊழியர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் இன் னலுக்கு ஆளானாலும் மத்திய அரசின் கஜானாவும், தனியார் நிறுவ னங்களின் பாக்கெட்டும் நிரம்புவ தால், இவை எந்த ஆட்சி வந்தாலும் மாறாது. நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத தேர்தல் அறிக்கைகளை திமுக வெளியிட்டுள்ளது என்று அப்போதே பலர் சுட்டிக் காட்டினர்.

நம்பி வாக்களித்த மக்கள் நிலை?

ஆனால், திமுகவின் வாக்குறுதி களை நம்பி தமிழக மக்கள் அவர்களுக்கு ஏகோபித்த ஆதரவு அளித்துள்ளனர். திமுக தனித்து 23 இடங்களிலும், கூட்டணி கட்சிகள் 14 இடங்களிலும் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளன. அமோக வெற்றி பெற்றது சரி. அதே நேரத்தில் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் என்னவாகும் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

மத்தியில் பாஜக தனிப்பெரும் பான்மையுடன் மீண்டும் ஆட்சி யைப் பிடித்துள்ளது. திமுகவின் தயவு பாஜக அரசுக்கு தேவையே இல்லை. மேலும், பாஜகவுக்கு ஓட்டுப்போடாத ஒரு மாநிலத்தைப் பற்றி அக்கட்சி எந்த அளவுக்கு அக்கறை காட்டும் என்பது கேள் விக்குரிய விஷயமே. அதிகபட்சம் தேர்தல் அறிக்கையில் சொல்லப் பட்ட விஷயங்களை நாடாளுமன்றத் தில் திமுக எம்.பி.க்கள் பேசலாம். நெருக்கடி கொடுத்து அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வைக்கும் நிலையை உருவாக்க முடியாது.

வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்லும் திமுக எம்.பி.க்களில் டி.ஆர்.பாலு, கனிமொழி, தயாநிதி மாறன், அ.ராசா ஆகியோர் அனு பவம் மிக்கவர்கள், கோரிக்கை களை வலுவாக பேசக் கூடியவர் கள். தமிழச்சி தங்கபாண்டியன், மார்க்சிஸ்ட் கட்சியின் சு.வெங்க டேசன் போன்ற எழுத்தாளர்கள் புதியவர்களாக இருந்தாலும் பேச்சுத் திறமை மிக்கவர்கள். காங்கிரஸ் சார்பில் திருநாவுக்கரசர், ஜெயக்குமார், செல்லக்குமார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் சுப்பராயன் ஆகியோர் நன்கு பேசக் கூடியவர்கள் என்பதால் தமிழகத்தின் கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில் அவர்கள் வலுவாக எதிரொலிப்பார்கள் என்று நம்பலாம்.

அவை எந்த அளவுக்கு நிறைவேறும் என்பதை தமிழகத் தின் மீது பாஜக கொண்டுள்ள பார்வையும், மத்திய அரசு தமிழகத் திடம் மேற்கொள்ளப் போகும் எதிர்கால அணுகுமுறையுமே காண்பிக்கும்.காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பொது தேர்தல் அறிக்கையாக வெளியிட்டிருந்தால்கூட பொருத்தமாக அமையும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x