தமிழகம் முழுதும் 19 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: தேர்தல் டிஜிபி மண்டபம் முகாமுக்கு மாற்றம்

தமிழகம் முழுதும் 19 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: தேர்தல் டிஜிபி மண்டபம் முகாமுக்கு மாற்றம்
Updated on
1 min read

தமிழகம் முழுதும் தேர்தல் நடைமுறை முடிவுக்கு வந்ததை அடுத்து 19 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். தேர்தல் டிஜிபி மண்டபம் அகதிகள் முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தமிழகம் முழுதும் பொதுத்தேர்தல் முடிவடைந்ததை அடுத்து ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் வரும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இன்று 19 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றி உள்துறைச்செயலர் நிரஞ்சன் மார்டி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து விபரம் வருமாறு:

1.தொழில்நுட்ப பிரிவு டிஜிபியாக பதவி வகிக்கும் தமிழ்ச்செல்வன் மின் வாரிய டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.

2.போக்குவரத்து மற்றும் சாலைப்பாதுகாப்பு பிரிவு டிஜிபி கரன்சின்ஹா மாநில குற்ற ஆவணகாப்பக டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.

3.சென்னை போக்குவரத்து கழக டிஜிபி சங்கர்ராம் ஜாங்கிட் மாநில போக்குவரத்துக்கழகம் தஞ்சாவூர், கும்பகோணம் டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.

4.தேர்தல்பிரிவு டிஜிபி அஷுதோஷ் சுக்லா மண்டபம் அகதிகள் முகாம் ராமநாதபுரத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

5.சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி விஜயகுமார் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.

6.மாநில குற்ற ஆவண காப்பக ஏடிஜிபி சீமா அகர்வால் சென்னை தலைமையிட ஏடிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.

7.தலைமையிட ஏடிஜிபி ரவி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு ஏடிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.

8.ஆயுதப்படை ஏடிஜிபி முகமது ஷகீல் அக்தர் குற்றப்பிரிவு ஏடிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.

9.குற்றப்பிரிவு ஏடிஜிபி ஆபாஷ்குமார் சிறைத்துறை ஏடிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.

10.சத்தியமங்கலம் சிறப்பு அதிரடிப்படை ஏடிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் தமிழ்நாடு காவலர் சீருடை பணியாளர் தேர்வாணைய ஏடிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.

11.தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய ஏடிஜிபி சுனில் குமார் ஆவின் விஜிலென்ஸ் ஏடிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.

12.ஆவின் விஜிலென்ஸ் ஏடிஜிபி சங்கர் ஜுவால் ஆயுதப்படை ஏடிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.

13.சிறப்பு புலனாய்வு பிரிவு ஏடிஜிபி அஷோக்குமார் தாஸ் தொழில்நுட்பப்பிரிவு ஏடிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.

14.லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஜிபி ஜெயந்த் முரளி தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.

15.காத்திருப்போர் பட்டியலிலிருந்த ஐஜி செந்தாமரைக்கண்ணன் சென்னை தலைமையிட ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.

16.சென்னை சிபிசிஐடி சிறப்பு பிரிவு எஸ்பி ராஜேஷ்வரி சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

17.மண்டபம் அகதிகள் முகாம் ஐஜி ப்ரமோத்குமார் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு பிரிவு ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.

18.லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி முருகன் பொருளாதாரக் குற்றத்தடுப்புப்பிரிவு ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.

19.பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு எஸ்.பி ஜெயலட்சுமி புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பிரிவு எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.  

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in