

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஓராண்டுக்குள் 90 லட்சம் பேருக்கு இலவச மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் வழங்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழகத்தில் 2011-ல் நடந்த சட்டமன்ற தேர்தலின்போது வெளி யிடப்பட்ட அதிமுக தேர்தல் அறிக் கையில் பெண்களின் வசதிக்காக மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா 2011 செப். 15-ல் இந்த இலவச திட்டத்தை தொடங்கி வைத்தார். இதற்காக தனித்துறையே ஒதுக் கப்பட்டது.
ரேஷன் கடைகளில் அரிசி பெற தகுதியுள்ள 1.83 கோடி பேருக்கு இந்த 3 இலவசப் பொருட்களும் வழங்கப்படுகின்றன. குளிர் பிரதேசங்களான நீலகிரி மாவட் டத்தில் 2.17 லட்சம் பேருக்கும், கொடைக்கானலில் 33 ஆயிரம் பேருக்கு மட்டும் மின் விசிறிக்கு பதிலாக மின்சார அடுப்பு வழங்கப் படுகிறது.
5 கட்டங்களாக இந்த திட்டத்தை செயல்படுத்த அரசு திட்டமிட்டது. முதல் கட்டத்தில் 25 லட்சம், 2-வது கட்டமாக 35 லட்சம் பேருக்கு 3 பொருட்களும் வழங்கப்பட்டுவிட்டன. 3-வது கட்டமாக 35 லட்சம் பேருக்கு வழங்க திட்டமிட்டதில், கடந்த ஜூலை வரை 33.58 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 1.42 லட்சம் பேருக்கு வழங்கும் பணி நடந்து வருகிறது. 3 கட்டமாக மொத்தம் 95 லட்சம் பேருக்கு மட்டுமே வழங்கியுள்ள நிலையில், இன்னும் 88 லட்சம் பேருக்கு வழங்க வேண்டியுள்ளது. மேலும் கடந்த 3 ஆண்டுகளில் 2 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இவர்களையும் சேர்ந்தால் 90 லட்சம் பேருக்கு இலவசப் பொருட் களை வழங்க வேண்டும்.
2016 மே மாதம் தமிழக சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இந் நிலையில், தற்போதைய நிலை யிலேயே இலவசப் பொருட்களை வழங்கினால் 52.5 லட்சம் பேர் மட்டுமே பெற முடியும்.
37.5 லட்சம் பேருக்கு வழங்க முடியாது. இதை தவிர்க்க 4 மற்றும் 5-வது கட்டமாக வழங்கப்படும் பொருட்களை ஒரே கட்டமாக 2015-ம் ஆண்டு இறுதிக்குள் வழங்கி முடித்துவிட அரசு திட்டமிட் டுள்ளது.