Published : 07 May 2019 07:52 PM
Last Updated : 07 May 2019 07:52 PM

மேட்ச் தான் வேணும் போல: சென்னை அணி ரசிகர்களைச் சாடிய தமிழ்நாடு வெதர்மேன்

சென்னைக்கு மழை வேண்டாம் என்று கூறிய ரசிகர்களை தனது ட்விட்டர் பக்கத்தில் சாடியுள்ளார் தமிழ்நாடு வெதர்மேன்

காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் உள்மாவட்டங்களில் வெப்பச்சலனத்தால் அடுத்த இரு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உண்டு என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். மேலும், சென்னையில் மழை எப்படியிருக்கும் என்பது குறித்து “மே மாதத்தைப் பொறுத்தவரை வெப்பச்சலன மழைக்கு வாய்ப்பு உண்டு. அடுத்த இரு நாட்களுக்கு உள்மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரைப் பொறுத்தவரை அடுத்து இருநாட்களுக்கு கடும் வெயில் இருக்கும். மழை பெய்யும் பட்சத்தில் 2 டிகிரி மட்டும் வெப்பம் குறையலாம்'' என்று தெரிவித்தார் பிரதீப் ஜான். இவருடைய பதிவுக்கு சென்னையில் இன்று (மே 7) மழை வேண்டாம் என்று பின்னூட்டம் இட்டனர்.

ஏன் என்றால், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் 2019 இறுதிப் போட்டியில் பங்கேற்கவுள்ள முதல் அணிக்கான  போட்டி நடைபெற்று வருகிறது. இதில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன. பெரிதும் எதிர்பார்க்கப்படும் போட்டி என்பதால், இன்று மழை வேண்டாம் என்று தமிழ்நாடு வெதர்மேன் பதிவு பின்னூட்டம் இட்டுள்ளனர்.

இந்த பின்னூட்ட பதிவுக்கு “மழை வேண்டாம் என்று பல பதிவுகளைப் பார்க்கிறேன். மழை முக்கியம் இல்லை போல... மேட்ச் தான் வேணும் போல. தமிழ்நாட்டின் உள்பகுதிகள் இடியுடன் கூடிய மழை இருக்கும்” என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார் பிரதீப் ஜான்.

'ப்ரோ.. காசு கொடுத்து டிக்கெட் வாங்கி வைச்சிருக்கேன். ப்ளீஸ் மழை வேண்டாம்' என்று திரும்பவும் பின்னூட்டம் இட்டார்கள். இதற்கு, “சென்னைக்கு பெரிய மழைக்கான வாய்ப்பில்லை. இந்த அப்டேட் தானே வேண்டும் என்று தெரிவித்துள்ளார் பிரதீப் ஜான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x