Last Updated : 16 May, 2019 11:32 AM

 

Published : 16 May 2019 11:32 AM
Last Updated : 16 May 2019 11:32 AM

கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட தடை விதிக்க முறையீடு: தேர்தல் ஆணையமே முடிவு செய்ய வேண்டும்: உயர் நீதிமன்றம்

கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்திற்கு தடை விதிப்பது தொடர்பாக தேர்தல் ஆணையமே முடிவெடுக்க வேண்டும் என, உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.  

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் சரவணன், உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் நிஷாபானு, தண்டபாணி அமர்வு முன்பாக, "பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரக் கூட்டங்களில் மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் பேசி வருகிறார்.

ஆகவே, அவர் பிரச்சாரத்தில் ஈடுபட தடை விதிக்க வேண்டும். அதனை அவசர மனுவாக ஏற்று விசாரிக்க வேண்டும்" என முறையிட்டார்.

அதற்கு நீதிபதிகள், "ஏற்கெனவே இதுதொடர்பான வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து தேர்தல் ஆணையத்தை அணுகுமாறு அறிவுறுத்தியுள்ளது. தேர்தல் பிரச்சாரத்திற்கு தடை விதிப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து தேர்தல் ஆணையமே முடிவெடுக்க வேண்டும். தேர்தல் நடைமுறைகள் அமலில் உள்ள நிலையில் நீதிமன்றம் தலையிட இயலாது. ஆகவே, இந்த மனுவை அவசர மனுவாக விசாரிக்க இயலாது" என மறுத்து விட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x