

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல், கடந்த 19-ம் தேதி முடிவடைந்தது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18-ம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் மற்றும் 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில், இன்று (மே 23) நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கியது. இதில், திருச்சி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான திருநாவுக்கரசர் முன்னிலை வகித்து வருகிறார்.
சுமார் 665 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.
அதிமுகவில் கூட்டணி அமைத்துள்ள தேமுதிக வேட்பாளர் 247 வாக்குகள் பெற்றுள்ளார்.
தூத்துக்குடி, நாமக்கல், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், திருநெல்வேலி, அரக்கோணம், சிவகங்கை, கள்ளக்குறிச்சி முதலான தொகுதிகளிலும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளே தபால் வாக்குகளை அதிகம் பெற்றுள்ளன.