

ஆன்-லைன் மூலம் மொபைல் போன் இணைப்பு பெறும் வசதியை பிஎஸ்என்எல் நிறுவனம், இந்தியாவிலேயே முதன் முதலாக சென்னையில் அறிமுகப்படுத்தி யுள்ளது.
இதுகுறித்து, பிஎஸ்என்எல் சென்னை தொலைபேசி தலைமைப் பொது மேலாளர் பாலசுப்பிரமணி யன் நேற்று சென்னையில் நிருபர் களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
சென்னையில் தற்போது பிஎஸ் என்எல் மொபைல் இணைப்பை 14.9 லட்சம் பேர் வைத்துள்ளனர்.
ஆண்டுக்கு 77 ஆயிரம் பேர் இன்டர்நெட் இணைப்பை பெற்று வருகின்றனர். இந்த எண்ணிக் கையை மேலும் அதிகரிப்பதற்காக பிஎஸ்என்எல் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பிஎஸ்என்எல் சென்னை மண்ட லத்தின் சார்பில், ஆன்-லைன் மூலம், உடனடியாக மொபைல் இணைப்பை பெறும் வசதியை அறிமுகப்படுத்துகிறது. இந்தியா விலேயே முதன்முறையாக இவ் வசதியை பிஎஸ்என்எல் சென்னையில் அறிமுகப்படுத்து கிறது.
இதன்படி, வாடிக்கையாளர்கள் வீட்டில் இருந்தபடியே பிஎஸ்என்எல் இணையதளத்துக்குச் சென்று தங்களது பெயர், விலாசம் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டும். அதில் அவருக்கு ஒரு பதிவெண் வழங்கப் படும். அந்த எண்ணை எடுத்துக் கொண்டு அருகில் உள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையத்துக்குச் சென்று, அந்த எண்ணை தெரிவித்தால் உடன டியாக அவருக்கு மொபைல் இணைப்பு வழங்கப்படும். அப்போது வாடிக்கையாளர் தனது புகைப்படம் மற்றும் அடையாள அட்டைகளை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், வாடிக்கையாளர் தங்களுக்கு பிடித்த (பேன்சி) எண்ணை இணையதளத்திலேயே தேர்வு செய்து கொள்ளலாம். இதற்கான மென்பொருளை பிஎஸ்என்எல் சென்னை மற்றும் ஐதராபாத்தைச் சேர்ந்த பொறியாளர்கள் வடி வமைத்துள்ளனர். இதேபோல், பிஎஸ்என்எல் ஆப் (செயலி) வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை மொபைல் போனில் தரவிறக்கம் செய்து வாடிக்கையாளர்கள் தங்களது தொலைபேசிக் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
விழாக்கால சலுகையாக, ரூ.100, 150, 250, 350-க்கு டாப்-அப் செய்தால், முழு டாக்டைம் வழங்கப்படும். இதேபோல், வீடியோ கால்களுக்கு (அழைப்புகள்) வாய்ஸ் கால்கள் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படும் இத்திட்டம் வரும் 20-ம் தேதி நடை முறைக்கு வருகிறது. 90 நாட்கள் இத்திட்டம் அமலில் இருக்கும்.
மேலும், பிரதமரின் ‘ஜன்தன் யோஜனா’ திட்டத்தின் கீழ், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் சேமிப்புக் கணக்கு தொடங்குபவர் களுக்கு பிஎஸ்என்எல் நிறுவனத் தின் இலவச சிம்கார்டு வழங்கப்படும். இவ்வாறு பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
100 ஆண்டு வாடிக்கையாளர்!
இந்நிகழ்ச்சியில் பிஎஸ்என்எல் தொலைபேசி சேவையை கடந்த 100 வருடங்களாக பயன்படுத்தி வரும் ரமேஷ்குமார் என்ற வாடிக்கையாளர் கவுரவிக்கப்பட் டார். அவருக்கு பிஎஸ்என்எல் நிறுவனம் சார்பில் பரிசு வழங்கப் பட்டது.
இதுகுறித்து, ரமேஷ் குமார் ‘தி இந்து’விடம் கூறுகையில், ‘1915-ம் ஆண்டு ஓரியண்டல் டெலி போன் நிறுவனத்திடம் இருந்து எங்கள் மூதாதையர் தொலைபேசி இணைப்பை பெற்றனர். அப்போது, 2 இலக்க எண்களை கொண்டிருந்தது. அதில் இருந்து நாங்கள் அந்த இணைப்பை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறோம்’’ என்றார்.