Published : 19 May 2019 07:46 AM
Last Updated : 19 May 2019 07:46 AM

அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் உட்பட 4 பேரவைத் தொகுதிகளில் இன்று இடைத் தேர்தல்: 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு

தமிழகத்தில் சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதி களில் இடைத் தேர்தல் வாக்குப்பதி வும் 5 மாவட்டங்களில் 13 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவும் இன்று நடைபெறுகிறது.

தமிழகத்தில் வேலூர் தவிர 38 மக்க ளவைத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல், 18 சட்டப்பேரவை தொகுதி களுக்கான இடைத்தேர்தல் கடந்த ஏப்.18-ம் தேதி நடந்து முடிந்தது. இந் நிலையில், உறுப்பினர்கள் மறைவு மற்றும் தகுதிநீக்கம் காரணமாக காலி யாக இருந்த திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19-ம் தேதி நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து இந்தத் தொகுதிகளில் பிரச்சாரம் முழுவீச்சில் நடைபெற்றது. தேர்தலுக்கு 48 மணி நேரம் முன்பாக பிரச்சாரத்தை முடிக்க வேண்டும் என்பதால் 4 தொகுதிகளிலும் நேற்று முன் தினம் பிரச்சாரம் முடிவடைந்தது.

இதையடுத்து, 4 தொகுதிகளுக்கு உட்பட்ட 1,128 வாக்குச்சாவடிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குகிறது. மேலும், கடந்த ஏப்.18-ம் தேதி நடந்த தேர்தலின் போது முறைகேடு, மாதிரி வாக்குப்பதி வில் ஏற்பட்ட குழப்பங்களால் தேனி, கடலூர், ஈரோடு, தருமபுரி, திருவள் ளூர் மாவட்டங்களில் உள்ள 13 வாக் குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டி ருந்தது. அதன்படி, மறுவாக்குப்பதிவும் இன்று நடக்கிறது.

இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடக்கும் 4 தொகுதிகளில் 301 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என்று கண் டறியப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடி களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளன. மேலும், 4 தொகுதிகளுக்குட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகள், மறுவாக்குப் பதிவு நடக்கும் 13 வாக்குப்பதிவு மையங்களில் நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுதவிர, 1,300 துணை ராணுவத் தினர், 2 ஆயிரம் ஊர்க்காவல் படையினர் உட்பட 16 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். 656 வாக்குச்சாவடிகளில் இணையதள வீடியோ ஒளிப்பதிவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், தேர்தல் பணியில் 5,508 தேர்தல் பணியாளர்கள் ஈடுபடுத்தப் படுகின்றனர். இவர்களுக்கு நேற்று இறுதிக்கட்ட பயிற்சி வழங்கப்பட்டு, பணியிடங்கள் ஒதுக்கப்பட்டன. தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங் களை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி களுக்கு அனுப்பும் பணி நேற்று பிற்பகல் முதல் தொடங்கியது. மண்ட லக் குழுக்கள் இந்த இயந்திரங்களை உரிய பாதுகாப்புடன் எடுத்துச் சென்று வாக்குச்சாவடிகளில் அலுவலர் களிடம் ஒப்படைத்தனர். அந்தந்த வாகனங்களும் ஜிபிஎஸ் கருவி மூலம் கண்காணிக்கப்பட்டது.

வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகியது. மாலை 6 மணி வரை நடக்கிறது. இந்தத் தேர்தலில் சூலூர் தொகுதியில் 2 லட்சத்து 95,158, அரவக்குறிச்சியில் 2 லட்சத்து 5,273, திருப்பரங்குன்றத்தில் 3 லட்சத்து 4,478, ஓட்டப்பிடாரத்தில் 2 லட்சத்து 33,847 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். மாலை 6 மணிக்கு அதிகளவில் வாக்காளர்கள் வாக்களிக்க வந்தால், டோக்கன் அளிக்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். இந்தத் தேர் தலில் வாக்காளர்களுக்கு வாக்காளர் சீட்டு (பூத் சிலிப்) வழங்கப்பட்டுள்ளது. இதை வாக்களிப்பதற்கான ஆவணமாக பயன்படுத்த முடியாது. வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட 12 ஆவணங் களை காட்டி வாக்களிக்கலாம் என தேர் தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்தத் தேர்தல் முடிவுகள் ஏற் கெனவே நடத்தி முடிக்கப்பட்டுள்ள தேர்தல் முடிவுகளுடன் சேர்த்து வரும் மே 23-ம் தேதி வெளியிடப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x