Published : 23 Sep 2014 09:20 AM
Last Updated : 23 Sep 2014 09:20 AM

சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு: குடிநீர் வாரியம் தகவல்

மழைநீர் சேமிப்புத் திட்டம் மூலம் சென்னை நகரில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை குடிநீர் வாரியத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

மழைநீர் சேகரிப்புத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் நாட்டிலேயே முன்னோடி மாநிலமாகத் தமிழகம் திகழ் கிறது. ஒவ்வோர் ஆண்டும் சுமார் 10 ஆயிரம் புதிய கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படுகின்றன. மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகளை ஏற்படுத்துவது பற்றியும் அதன் பராமரிப்பு பற்றியும் சென்னைவாழ் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

மழைநீர் சேகரிப்பு குறித்து மக்கள் நன்கு தெரிந்துகொள்ளும் வகையில் சென்னையில் உள்ள சென்னை குடிநீர் வாரிய பகுதி அலுவலகங்களில் ‘மழை இல்லம்’ கட்டப்பட்டுள்ளது. இதில் மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்பு மாதிரிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தென்மேற்கு பருவமழை குறைவாகப் பெய்தபோதிலும், இத்திட்டம் மூலம் நிலத்தடி நீர்மட்டமும், அதன் தரமும் கணிசமாக உயர்ந்துள்ளது. சென்னை நகரில் நிலத்தடி நீர்மட்டம் 0.40 மீட்டர் முதல் 3.50 மீட்டர் வரை உயர்ந்துள்ளது. புழல் பகுதியில் 3 மீட்டருக்கு அதிகமாகவும், அண்ணா நகர், கோயம்பேடு பகுதிகளில் 2 மீட்டருக்கு அதிகமாகவும், பரங்கிமலை பகுதியில் 1 மீட்டருக்கு அதிகமாகவும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மற்ற பகுதிகளில் 1 மீட்டருக்கு குறைவாக உள்ளது.

கட்டிட உரிமையாளர்கள் தாங்கள் ஏற்படுத்தியுள்ள மழைநீர் சேமிப்புக் கட்டமைப்புகளில் படிந்துள்ள கசடுகளை அகற்றினால், இதேபோன்ற பலனை எதிர்வரும் வடகிழக்கு பருவமழையின்போதும் பெற லாம்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகளை ஏற்படுத்துவது பற்றியும் அதன் பராமரிப்பு பற்றியும் சென்னைவாழ் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x