Last Updated : 13 May, 2019 12:00 AM

 

Published : 13 May 2019 12:00 AM
Last Updated : 13 May 2019 12:00 AM

அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் மீண்டும் அதிகரிக்கும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு: திருச்சி மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

திருச்சி மாநகராட்சியில் பாலிதீன் பை உள்ளிட்ட தடை செய்யப் பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு மீண்டும் சர்வசாதார ணமாக புழக்கத்துக்கு வந்துள்ளது சமூக ஆர்வலர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இதற்கு மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

ஒருமுறை பயன்படுத்தி வீசியெறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கவும், பயன்படுத்தவும் தமிழகத்தில் கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை யொட்டி, திருச்சி மாநகராட்சி உட்பட மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில், உள்ளாட்சி அமைப்பு நிர்வாகங்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி கள், பிரச்சாரம் நடைபெற்றது.

உள்ளாட்சி அமைப்பின் அதிகாரிகள், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்கள், பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் தொழிலக உரிமையாளர்கள், மாற்றுப் பொருள் தயாரிக்கும் தொழிலக உரிமையாளர்கள் ஆகியோருடன் கலந்தாய்வுக் கூட்டமும் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து, மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கடைகளில் திடீர் சோதனைகள் நடத்தப்பட்டு, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், அபராதமும் விதிக்கப்பட்டது.

இதன் காரணமாக சில மாதங் கள் துணிப் பைகள் அதிகளவில் புழக்கத்தில் இருந்தன. பூ, பழங்கள், காய்கறிக் கடை, டீ கடைகள் ஆகியவற்றில் பிளாஸ் டிக் பயன்பாடு அறவே இல்லாமல் மாறியிருந்தன. மாறாக, காகித பைகள், துணிப் பைகள், இலைகள், எவர்சில்வர் பாத்திரங்கள் பயன்பாடு அதிகரித்தது. இந்தநிலையில், கடந்த ஓரிரு மாதங்களாக திருச்சி மாநகராட்சிப் பகுதியில் பாலிதீன் பைகள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன் பாடு மீண்டும் அதிகரித்துள்ளது.

சாலையோர பூ, பழம் வியாபாரிகள், இனிப்பகங்கள், உணவகங்கள், துணிக் கடைகள், டீ கடைகள் ஆகியவற்றில் பாலிதீன் பைகள், டீ கப்புகள் சர்வசாதாரணமாக புழக்கத்தில் உள்ளன. சாலையெங்கும் பாலிதீன் பைகள் பரவிக் கிடக்கின்றன. இது சமூக ஆர்வலர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

இதுகுறித்து அவர்கள் கூறும் போது, “பிளாஸ்டிக் தடை தொடங்கிய சில மாதங்கள் வரை பாலிதீன் பைகள் பயன்பாடு வெகுவாகக் குறைந்திருந்தது. அபராதம் உள்ளிட்ட நடவடிக்கை களுக்கு பயந்து பயன்படுத் துவதைத் தவிர்த்திருந்தனர். ஆனால், தற்போது பாலிதீன் பைகள், டீ கப்புகள் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. மாந கராட்சி அதிகாரிகள் பெயரளவில் சோதனை நடத்தி, நடவடிக்கை எடுப்பதைத் தவிர்த்து, முறையாக தொடர் சோதனை நடத்தி உரிய நடவடிக்கை எடுத்தால் நிச்சயமாக பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க முடியும். பிளாஸ்டிக் ஒழிப்புக்கு முக்கியமாக பங்காற்ற வேண்டிய மாசு கட்டுப்பாடு வாரியத்தினர் இதுவரை நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை’’ என்றனர்.

இதுதொடர்பாக மாநகராட்சி வட்டாரங்களில் கேட்டபோது அவர் கள் கூறியது: “மாநகராட்சியின் விழிப்புணர்வு நடவடிக்கை, தண்டனை நடவடிக்கைகளால் பெரிய கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு பெரும ளவில் குறைந்துள்ளது.

தற்போது, சாலையோர கடைகளில் மீண்டும் பாலிதீன் பைகளை பயன்படுத்துவது தெரியவந்துள் ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு மக்களும் ஒத்துழைக்க வேண்டும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x