

ஆம்பூர் சட்டப்பேரவை தொகுதியில் திமுக வேட்பாளர் வில்வநாதனின் வெற்றி உறுதி செய்யப்பட்டதாகவே தெரிவிக்கிறார்கள்.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல், கடந்த 19-ம் தேதி முடிவடைந்தது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18-ம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் மற்றும் 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், இன்று (மே 23) நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கியது.
ஆம்பூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வில்வநாதனின் வெற்றி வாய்ப்பு உறுதி செய்யப்பட்டதாகவே தெரிகிறது.
திமுக வேட்பாளர் வில்வநாதன், சுமார் 86,291 வாக்குகள் பெற்றிருக்கிறார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஜோதி ராமலிங்க ராஜா48,475 வாக்குகள் பெற்றுள்ளார். சுமார் 37,816 வாக்குகள் வித்தியாசத்தில் வில்வநாதன் முன்னிலை வகித்துள்ளார். கிட்டத்தட்ட, இவரின் வெற்றி உறுதிசெய்யப்பட்டதாகவே தெரிகிறது.