Published : 31 May 2019 12:32 PM
Last Updated : 31 May 2019 12:32 PM

எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: திமுக அறிவிப்பு

திமுக எம்எல்ஏக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம், ஜூன் 3 ஆம் தேதி நடைபெறும் என, அக்கட்சி அறிவித்துள்ளது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 37 தொகுதிகளையும், 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 13 தொகுதிகளையும் திமுக கைப்பற்றியது. இந்நிலையில், திமுக எம்எல்ஏக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வரும் ஜூன் 3 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிவிப்பில், "மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக மாவட்ட கழக செயலாளர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம், வரும் திங்கள்கிழமை (ஜூன் 3) அன்று காலை 10 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலையத்தில் நடைபெறும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளும் ஜூன் 3 ஆம் தேதி தான். அவர் மறைந்து வரும் முதல் பிறந்தநாள் என்பதால், திமுகவின் இக்கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x