Published : 02 May 2019 08:08 AM
Last Updated : 02 May 2019 08:08 AM

சமாதி நிலையை அடைய உண்ணா நோன்பு மேற்கொண்டுள்ள சமண பெண் துறவி

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள மேல்சித்தாமூர் கிராமத்தில் ஜினகஞ்சி சமண மடமும், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான மல்லிநாதர் மற்றும் பார்சுவநாதர் தீர்த்தங்கரர்கள் கோயில்களும் உள்ளன. தமிழகத்துக்கு யாத்திரை வரும் சமணத் துறவிகள், இக்கோயிலுக்கு வந்து செல்வது வழக்கம்.

2 மாதங்களுக்கு முன்னர், கர்நாடக மாநிலத்தில் இருந்து 2 திகம்பர சமணத் துறவிகள் தலைமையில் 9 பெண் துறவியர் தமிழகம் வந்தனர். இவர்களில் சுப்ரமத் பிரபாவதி மாதாஜி (65) என்ற பெண் துறவி, சமண மத கோட்பாட்டின்படி, உண்ணா நோன்பிருந்து, சமாதி நிலையை அடைய முடிவு செய்தார். அந்த வகையில் 25 நாட்களுக்கு முன்பு மேல்சித்தாமூர் சமணர் மடத்துக்கு வருகை புரிந்த அவர், அன்று முதல் உணவு உண்ணாமல் தண்ணீர் மட்டும் அருந்தி வந்தார். இந்நிலையில் கடந்த 27-ம் தேதி முதல், தண்ணீர் அருந்துவதையும் நிறுத்தி விட்டார்.

வடக்கு நோக்கி தலைவைத்துப் படுத்திருக்கும் இவரது அருகில், 24 மணி நேரமும், பெண் துறவியரும், பக்தர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். உண்ணாவிரதம் இருந்து வரும் இப்பெண் துறவியை அப்பகுதி மக்கள் வணங்கி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x