

அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் செந்தில்பாலாஜி முன்னிலை வகித்து வருகிறார்.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல், கடந்த 19-ம் தேதி முடிவடைந்தது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18-ம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் மற்றும் 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், இன்று (மே 23) நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கியது.
அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் செந்தில்பாலாஜி 21,802 வாக்குகள் பெற்றுள்ளார். அங்கே உள்ள அதிமுக வேட்பாளர் 14,174 வாக்குகள் பெற்று பின்னடைவில் உள்ளார்.
தற்போதைய நிலவரப்படி, சுமார் 6,628 வாக்கு வித்தியாசத்தில் செந்தில்பாலாஜி முன்னிலை வகித்துள்ளார்.