

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்து 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் . வெப்பச்சலனம் காரணமாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யக்கூடும்.
தமிழ்நாட்டில் குறிப்பாக உள் மாவட்டங்களான, நீலகிரி,கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், நாமக்கல், ஈரோடு, சேலம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் அப்போது 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் 4 செ.மீ,மழையும், சித்தேரியில் 3 செ.மீ மழையும், நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் 1 செ.மீ.மழையும் தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் 1 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
வெப்பநிலையானது இயல்பைவிட 2 டிகிரி முதல் 3 டிகிரி அதிகம் பதிவாக கூடும். அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அனல் காற்று வீச வாய்ப்பில்லை. சென்னையைப் பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஷாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஷாகவும் பதிவாக வாய்ப்புள்ளது, என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது