Published : 29 May 2019 07:34 am

Updated : 29 May 2019 07:34 am

 

Published : 29 May 2019 07:34 AM
Last Updated : 29 May 2019 07:34 AM

காவிரியில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 9.19 டிஎம்சி நீர் திறக்க வேண்டும்: கர்நாடக அரசுக்கு மேலாண்மை ஆணையம் உத்தரவு

9-19

காவிரியில் தமிழகத்துக்கு வழங்க வேண் டிய 9.19 டிஎம்சி நீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில், மேகேதாட்டு அணை விவகாரம் குறித்து விவாதிக்க தமிழக அரசு மறுத்துவிட்டது.

காவிரி நதி நீர் பங்கீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பின்படி கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களையும் உறுப்பினர் களாக கொண்டு காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு அமைக்கப்பட்டுள்ளது.


இதற்கு தலைவராக மசூத் உசேன் நியக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 3 மற்றும் கடந்த 23 ஆகிய தேதிகளில் இருமுறை ஆணையம் கூடி, நதி நீர் பங்கீடு தொடர்பாக விவாதித் துள்ளது.

இந்நிலையில், டெல்லியில் உள்ள மத்திய நீர்வள ஆணைய அலுவலகத்தில் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூத் உசேன் தலைமையில் நேற்று மூன் றாம் முறையாக கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் கர்நாடகா, தமிழ் நாடு உள்ளிட்ட 4 மாநிலங்களைச் சேர்ந்த நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது, மத்திய நீர்வளத்துறையில் தாக்கல் செய்யப்பட் டுள்ள மேகேதாட்டு அணையின் திட்ட வரைவு அறிக்கை குறித்து விவாதிக்கப் பட வேண்டும் என கர்நாடகா அரசு தரப்பில் கோரப்பட்டது.

தமிழகம் எதிர்ப்பு

இதற்கு தமிழக அரசு தரப்பில், ''காவிரி யின் குறுக்கே மேகேதாட்டுவில் அணைக் கட்ட தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு, காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பு ஆகிய இரண்டிலும் மேகேதாட்டுவில் புதிய அணை கட்ட அனுமதி வழங்கப்பட வில்லை. ஆனாலும், கர்நாடக அரசு சட்ட விரோதமாக மேகேதாட்டுவில் அணைக் கட்ட முயற்சித்து வருகிறது. எனவே, நீதிமன்றத்தால் ஏற்கப்படாத மேகேதாட்டு திட்டத்தை குறித்து விவாதிக்கக் கூடாது''என வலியுறுத்தப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட காவிரி மேலாண்மை ஆணையம் விவாதிக்க இருந்த பொருள் நிரலில் மேகேதாட்டு திட்டம் குறித்த நிரலை நீக்கியது.

இதையடுத்து, காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டதாவது:

உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப் பின்படி, பிப்ரவரி மாதத்தில் இருந்து மே மாதம் வரை சுற்றுச்சூழல் நலனுக்காக காவிரியில் இருந்து தமிழகத்திற்கு மாதம் தோறும் 2.5 டிஎம்சி நீரை கர்நாடகா வழங்க வேண்டும். ஆனால், கர்நாடக அரசு இந்த ஆண்டு உரிய நீரை திறக்கவில்லை. நீதிமன்ற ஆணையை மதிக்காததால் காவிரி நதியை சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, மே மாதம் நிறைவடைவதற்குள் கர்நாடகா 2 டிஎம்சி காவிரி நீரை தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டும்.

தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங் களில் ஜூன் 1-ம் தேதி முதல் குறுவை சாகுபடி தொடங்கப்பட உள்ளது. இத னால் விவசாயிகள் மேட்டூர் அணையை திறக்க வேண்டும் என கோரி வருகின்ற னர். மேட்டூர் அணையில் நீர் இருப்பு குறை வாக இருப்பதால் அணையை திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, குறுவை சாகுபடிக்கு ஏதுவாக, ஜூன் மாதத்தில் கர்நாடகா வழங்க வேண்டிய 9.19 டிஎம்சி காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் மசூத் உசேன், ‘‘உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு ஜூன் மாதத்தில் வழங்க வேண்டிய 9.19 டிஎம்சி காவிரி நீரை கர் நாடகா திறந்துவிட வேண்டும்'' என உத்தர விட்டார். இந்த உத்தரவால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கர்நாடகாவில் விவசாயிகள் போராட்டம்

தமிழ்நாட்டுக்கு 9.19 டிஎம்சி நீரை திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டதற்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. நேற்று மாலை மண்டியாவில் கரும்பு விவசாயிகள் சிலர் ஆங்காங்கே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாண்டவப்புரா அருகே பெங்களூரு - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு விவசாயிகள் 50-க்கும் மேற் பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பெங்களூரு - மைசூரு இடையே சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் கடும் நெரிசல் ஏற்பட்டது.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு மண் டியா எம்பி சுமலதா, பெங்களூரு ஊரக எம்பி டி.கே.சுரேஷ், காவிரி நீர் பாதுகாப்பு குழு தலைவர் மாதே கவுடா உள்ளிட் டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பாஜக மாநில தலை வர் எடியூரப்பா, ‘‘ கர்நாடகாவில் குடிக்கவே நீர் இல்லாத போது தமிழ்நாட்டுக்கு எப்படி நீரை திறந்துவிட முடியும்? இந்த விவ காரத்தில் முதல்வர் குமாரசாமி கர்நாடக மக்களுக்கு அநீதி ஏற்பட அனுமதிக்கக் கூடாது''என வலியுறுத்தியுள்ளார்.

கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் கூறுகை யில், ''காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு துரதிஷ்டவசமானது. கர்நாடகாவில் மழை பொய்த்து, கடும் வறட்சி நிலவுகிறது. இந்த உத்தரவு குறித்து முதல்வர் மற்றும் நீர்ப்பாசனத்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து விரைவில் முடிவெடுக்கப்படும்''என்றார்.


Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author