

நாகர்கோவில் தொகுதியின் முன்னாள் திமுக எம்.பி-யான ஹெலன் டேவிட்சன், கடந்த 2009 - 2014 காலகட்டத்தில் தான் எம்பியாக இருந்தபோது செய்த பணிகளை எல்லாம் தொகுத்து புத்தகமாக வெளியிடுகிறார்.
மே 25-ல், நாகர்கோவிலில் புத்தகம் வெளியீடு. தேர்தல்கூட முடிந்துவிட்டதே... இப்போது எதற்காக இப்படியொரு ஏற்பாடு என்று கேட்டால், “பொன்.ராதாகிருஷ்ணன் அளவுக்கு இந்தத் தொகுதிக்காக யாருமே செயல்படவில்லை என்று தேர்தல் சமயத்துல பாஜக காரங்க பெரும் பிரச்சாரம் பண்ணிட்டாங்க. அதை முறியடிக்கத்தான் அக்கா தன்னோட சாதனைகளைச் சொல்லி புத்தகம் போடுறாங்க” என்கிறார்கள் கழக கண்மணிகள்!