

கன்னியாகுமரியில் களம்கண்ட பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன், வாக்கு எண்ணும் மையத்துக்குக் காலையில் உற்சாகமாகவே வந்தார்.
முதல் சுற்றிலேயே முடிவு தனக்கு சாதகமாக இல்லை என்று தெரிந்ததும், வளாகத்தில் இருந்த ஷெட்டில் தனியாகப் போய் உட்கார்ந்துவிட்டார். அங்கிருந்தபடியே வாக்கு வித்தியாசத்தை பேப்பரில் குறித்துக்கொண்டே வந்தவர், செல்போன் வழியாக மற்ற தொகுதிகளின் நிலவரங்களையும் பார்த்துக்கொண்டே வந்தார்.
தான் இரண்டு லட்சம் வாக்குகள் பின் தங்கிய பிறகும் அங்கிருந்து அவர் நகரவில்லை. அதேசமயம் காங்கிரஸ் வேட்பாளர் ஆரம்பத்திலிருந்தே டாப் கியரில் இருந்தாலும், மாலையில்தான் வாக்கு எண்ணும் மையத்துக்கு வந்தார். குமரியில் ‘கை’ ஓங்கினாலும் அகில இந்திய அளவில் காங்கிரஸின் நிலையைப் பார்த்து வாடிப்போனார் வசந்தகுமார்.