Published : 30 May 2019 10:18 am

Updated : 30 May 2019 10:18 am

 

Published : 30 May 2019 10:18 AM
Last Updated : 30 May 2019 10:18 AM

18-ம் நூற்றாண்டை சேர்ந்த தமிழ் எண்கள் பொறித்த மைல் கல்: அம்பாசமுத்திரம் அருகே கண்டுபிடிப்பு

18

திருநெல்வேலிமாவட்டம் அம்பாச முத்திரத்திலிருந்து பிரம்மதேசம் செல்லும் சாலையின் இடது புறத் தில் உள்ள கவுதமபுரி வண்டன் குளக்கரையில் 18- ம் நூற்றாண்டை சேர்ந்த தமிழ் எண் களுடன் கூடிய மைல்கல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் அருகிலுள்ள புதுக் கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழ கம் நிறுவனர் ஆ.மணிகண்டன், தலைவர் கரு.ராசேந்திரன், ராமநாத புரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத் தின் நிறுவன தலைவர் வே.ராஜ குரு, கொல்லங்குடி கா.காளிராசா, மதியழகன் ஆகியோர் அடங்கிய குழுவினர் இதை கண்டறிந்துள்ள னர். இந்த மைல் கல்லின் வரலாற்று பின்னணி குறித்து மணிகண்டன், ராஜகுரு ஆகியோர் கூறியதாவது:


புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் தஞ்சை மாவட்ட பகுதிகளில் 5 மைல்கல் கல்வெட்டுகள் கண் டெடுக்கப்பட்டுள்ளன. இந்த கல் வெட்டுகளில் தமிழ் ரோமன், அரபுஎண்கள் பொறிக்கப்பட்டுள் ளது. இது இப்பகுதியில் அடையா ளம் காணப்பட்ட முதல் தமிழ் எண் மைல் கல்லாகும்.

முதலாம் ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் மிக முக்கியமான தளமாகவும், ஆங்கிலேயர் ஆட்சி யில் 1850 -ம் ஆண்டுவரை தாலுகா தலைமையிடமாகவும் இருந்த பிரம்மதேசம் வரலாற்றில் முக்கியத் துவம் வாய்ந்த பகுதியாகும்.

ஆங்கிலேயர் ஆட்சியின் மிக முக்கியமான கட்டுமான கட்ட மைப்பு விரிவாக்கத்தின் ஒரு பகுதி யாக 18- ம் நூற்றாண்டின் இறுதி காலக்கட்டத்தில் அம்பாசமுத்திரம் தொடங்கி பிரம்மதேசம் வரை இச் சாலை அமைக்கப்பட்டு, முக்கிய வழியாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

கவுதமபுரியில் கண்டுபிடிக்கப் பட்ட இக்கல்வெட்டில் அம்பாச முத்திரம் "க", பிரம்மதேசம் “க” என பொறிக்கப்பட்டுள்ளது.அதாவது கல்வெட்டு நடப்பட் டுள்ள வண்டன் குளக்கரையிலி ருந்து இரண்டு ஊர்களும் நேரெதிர் திசையில் ஒரு மைல்தூரம் என்று ஒரு பக்கத்தில் மட்டும் பொறிக்கப் பட்டுள்ளது. அம்பாசமுத்திரம் மற்றும் பிரம்மதேசம் செல்பவர் களுக்காக குறிப்பிட்ட இடைவெளி களில் இந்த கல்வெட்டுகள் நடப்பட் டிருக்கவேண்டும்.

காலம் குறித்த குறிப்புகள் இல்லை

ஆனால், இந்த வழியில் வேறு எங்கும் சாலை ஓரத்தில் இது போன்ற தமிழ் எண் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளை அடையாளம் காணவில்லை. இக்கல்வெட்டின் மூலம் 200 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே முக்கியத்துவம் வாய்ந்த நெடுஞ் சாலையாக இது இருந்துள்ளதை மைல்கல் கல்வெட்டு உறுதிப் படுத்துகிறது.

மைல் கல்லின் காலம் குறித்த தெளிவான குறிப்புகள் இல்லை என்பதால் பிரம்மதேசம் தாலுகா தலைமையிடமாக இருந்த கால கட்டத்தில் அதாவது கி.பி. 1850-க்கு முன்னதாக தமிழகம் முழுவதும் சாலை அமைத்த போது கிழக் கிந்திய கம்பெனியினரால் இக்கல் வெட்டுகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

தற்போது நடைமுறையிலுள்ள அரபுஎண்களை பயன்படுத்தாமல் ரோமன் எண்கள், தமிழ் எண்கள் மட்டுமே இந்த மைல் கற்களில் பொறிக்கப்பட்டிருப்பதன் மூலம் ஆங்கிலேயர் ஆட்சியின் தொடக் கத்தில் தமிழக ஆட்சி நிர்வாகத்தில் ரோமன் மற்றும் தமிழ் எண்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந் துள்ளது தெரிய வருகிறது.

ஆங்கிலேயர் காலத்திலேயே தமிழ் எண்கள் அரசு மற்றும் பொது மக்கள் பயன்பாட்டில் இருந்துள் ளதை அறிய முடிகிறது. மேலும், சமீப காலமாகத்தான் புழக்கத்திலி ருந்து அவை அற்றுப்போயிருக் கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.


Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author