Published : 17 May 2019 12:00 AM
Last Updated : 17 May 2019 12:00 AM

அமரர் ஊர்தி இல்லாத ராமேசுவரம் அரசு மருத்துவமனை: இறந்தவரின் உடல் 4 மணி நேரம் கடற்கரையில் கிடந்த அவலம்

ராமேசுவரம் அரசு மருத்துவம னையில் அமரர் ஊர்தி இல்லா ததால் இறந்தவரின் உடலை அக்னி தீர்த்தக் கடற்கரையிலேயே 4 மணி நேரம் வைக்கப்பட்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ராமேசுவரம் இந்துக்களின் புண்ணிய தலமாகவும் சுற்றுலாத் தலமாகவும் இருப்பதால் இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக் தர்களும், சுற்றுலாப் பயணி களும் வந்து செல்கின்றனர். குறிப்பாக ராமேசுவரத்துக்கு வடமாநிலங்களில் இருந்து குடும் பத்துடன் வயது முதிர்ந்த பக்தர்கள் இங்கு சில நாட்கள் தங்கி பூஜைகள் செய்து வழிபாட்டில் ஈடுபடுவது வழக்கம்.

அப்போது வயது முதிர்வு மற்றும் உடல்நிலை பாதிக்கப்பட்டு யாரேனும் இறக்க நேரிட்டால் உடல்களை எடுத்துச் செல்வதற்கு வாகனங்கள் இல்லை. இதனால், இறந்த இடத்திலேயே மணிக்கணக்கில் உடலைப் போட்டு வைக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பிப்.15-ம் தேதி மாசி அமா வாசை அன்று ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் தண்ணீர் லாரி மோதி உயிரிழந்த வெளி மாநில பெண் பக்தரின் உடலை நகராட்சி குப்பை வண்டியில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற சம்பவம் ராமேசுவரத்தில் சுற்றுலாப் பயணிகள், பக்தர்களி டையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நேற்று பிற்பகல் 2 மணியளவில் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க ஆணின் உடல் அக்னி தீர்த்தக் கடற்கரையில் கரை ஒதுங்கியது. சம்பவ இடத்துக்கு போலீஸார் வந்து விசாரணையை முடித்து விட்டு உடலை ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தார்.

ஆனால், அமரர் ஊர்தி இல் லாததால் உடல் அக்னி தீர்த்தக் கடற்கரையிலேயே சுமார் 4 மணி நேரம் வைக்கப்பட்டிருந்தது. இது பக்தர்களுக்குக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாலை 6 மணிக்குப் பின்னர் மண்டபத்திலிருந்து அவசர ஊர்தி ஒன்று வரவழைக்கப்பட்டு உயிரிழந்தவரின் உடல் ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

ராமேசுவரத்தில் இறந்தால் மோட்சம் கிடைக்கும் என்று கூறப்படும் நிலையில், இங்கு உயிரிழக்கும் பக்தர்களின் உடல்களை எடுத்துச் செல்வதற்கு அமரர் ஊர்தி வாகனங்கள் இல்லாததால் திறந்த வெளியில் உடலை வைத்திருக்கும் அவல நிலை தொடர்கிறது. எனவே, ராமேசுவரத்துக்கு உடனடியாக அமரர் ஊர்தி வசதியை அரசு வழங்க வேண்டும் என பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x