குழந்தைகள் விற்பனை விவகாரம்: ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது; நாமக்கல் ஆட்சியர் பேட்டி

குழந்தைகள் விற்பனை விவகாரம்: ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது; நாமக்கல் ஆட்சியர் பேட்டி
Updated on
1 min read

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறந்த குழந்தைகள் அந்தத் தாயிடமே உள்ளதா என சுகாதாரத் துறையினர் ஆய்வு மேற்கொண்டு, ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது என, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

ராசிபுரம் குழந்தை விற்பனை தொடர்பாக வழக்கு விசாரணையில் கொல்லிமலை மக்களின் ஏழ்மையைப் பயன்படுத்தி அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் விற்பனை நடந்துள்ளது விசாரணையில் தெரிந்தது.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியாமரியம் கூறும்போது, "குழந்தை விற்பனை தொடர்பான புகார் வந்ததையடுத்து, சுகாதாரத் துறையினர், தனிப்படை அமைத்து கொல்லிமலை முழுவதும் உள்ள ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பிரசவத்திற்கு வந்த தாய்மார்கள் விவரம் மற்றும், அந்தக்  குழந்தைகள் அந்தந்த தாயிடம் உள்ளதா என ஆய்வு நடத்தி வருகின்றனர்.

ஆய்வு தொடர்ந்து நடை பெற்று வருகிறது. இது குறித்த ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் இதுபோன்ற ஆய்வுகள் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது" என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in