Published : 03 May 2019 09:43 AM
Last Updated : 03 May 2019 09:43 AM

வண்டலூர் அருகே வேங்கடமங்கலத்தில் திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் நச்சுப் புகை: பல்லாவரம் நகராட்சிக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ்

வண்டலூர் அருகே வேங்கடமங் கலம் திடக்கழிவு மேலாண்மை கிடங் கில் குப்பை திடீரென தீப்பிடித்து எரிந்து நச்சுப்புகை வெளியேறியது தொடர்பாக ஒரு மாதத்துக்குள் பதில் அளிக்க பல்லாவரம் நகராட்சிக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நோட் டீஸ் அனுப்பியுள்ளது.

வண்டலூர் அருகே உள்ள வேங் கடமங்கலம் கிராமத்தில் திடக் கழிவு மேலாண்மை கிடங்கு அமைந் துள்ளது. இங்கு தாம்பரம், பல்லா வரம், செம்பாக்கம், பம்மல் போன்ற நகராட்சிகளில் சேகரமாகும் குப்பை யில் இருந்து எரிபொருள் தயாரிக் கும் ஆலை உள்ளது.

இந்த ஆலையில் கடந்த ஏப்.7-ம் தேதி மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக எழுந்த புகை மூட்டத்தால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். தொடர்ந்து புகை கிளம்பிய தால், அப்பகுதி மக்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டதாக சொல்லப் படுகிறது. இதனால் இந்த திடக் கழிவு மேலாண்மை கிடங்கின் அருகில் குடியிருந்த 20 இருளர் குடும்பத்தினர் வீடுகளை காலி செய்துவிட்டனர்.

பல்லாவரம் நகராட்சியினர் பல நாட்களாக போராடிப் புகையை கட்டுப்படுத்தி வந்தாலும், கிடங்கில் இருக்கும் குப்பை எரிந்து ஆங் காங்கே இப்போதும் புகைந்து கொண்டே இருப்பதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். கடந்த 26 நாட்களாக கிடங்கில் இருந்து புகை வந்து கொண்டேயிருப்பதால் வேங்கடமங்கலம், ரத்னமங்கலம், அகரம் தென், கண்டிகை, மேலக் கோட்டையூர், பதுவஞ்சேரி, வெங் கம்பாக்கம் உள்ளிட்ட பல கிராமங் களைச் சேர்ந்த பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத் திணறல், சுவாசக் கோளாறு போன்றவை ஏற்பட்டுள்ளன.

திடக்கழிவு கிடங்கில் இருந்து புகை கிளம்புவது தொடர்பாக எடுக் கப்பட்ட நடவடிக்கை தொடர்பான முழு விவரங்களை ஒரு மாதத்துக் குள் அளிக்க, மாநில மாசு கட்டுப் பாட்டு வாரியம் சார்பில் பல்லா வரம் நகராட்சிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் நோட்டீஸ் வந்த பிறகுதான் நகராட்சி சார்பில் புகையை கட்டுப்படுத் தும் பணி துரிதப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் பொதுமக்கள் கூறு கின்றனர்.

இதுகுறித்து நகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: கிடங்கில் இருந்த குப்பை எரிந்து எழுந்த தீயை கட்டுப்படுத்தி உள்ளோம். ஆனாலும் தொடர்ந்து புகை வந்து கொண்டே இருப்பதால், அதை கட்டுப்படுத்த கிடங்கில் புதிதாக ஆழ்துளைக் கிணறு அமைத்தும், அருகில் உள்ள ஏரியில் இருந்து தண்ணீர் எடுத்தும் கட்டுப்படுத்தி வருகிறோம். வெயில் காலம் என்ப தால் தீயினால் ஏற்படும் புகையை கட்டுப்படுத்துவது சற்று கடின மாக உள்ளது. தொடர்ந்து கட்டுப் படுத்தும் நடவடிக்கையை மேற் கொண்டு வருகிறோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x