Published : 24 May 2019 12:25 PM
Last Updated : 24 May 2019 12:25 PM

தமிழக தேர்தல் நிலவரம்: சரியாக கணித்தது யார்? -மீள்பார்வை

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் தொடர்பாக நடத்தப்பட்ட தேர்தலுக்க பிந்தைய கருத்துக்கணிப்புகளை மிஞ்சி மிக அதிகமான இடத்தில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

மக்களவைத்  தேர்தல் முடிவுகள் தொடர்பாக தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகின. தமிழகத்தில் திமுக  கூட்டணிக்கு அதிகமான இடங்கள் கிடைக்கும் என பல்வேறு கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்தன. எனினும் திமுக அணி இமாலய வெற்றி பெறும் என எந்த கருத்துக் கணிப்பும் தெரிவிக்கவில்லை.

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று (மே 23) காலை 8 மணிக்குத் தொடங்கியது. தொடக்கம் முதலே பெருவாரியான தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது.

வேலூர் தொகுதியை தவிர 38 இடங்களில் , தமிழகத்தில் 37 தொகுதிகளைக் கைப்பற்றி பெரும் வெற்றி பெற்றுள்ளது திமுக கூட்டணி.  இந்த வெற்றி  என்பது தேர்தலுக்கு முந்தையக் கருத்துக் கணிப்புகளை விடவும் கூடுதலான வெற்றியை திமுக அணி பெற்றுள்ளதையே காட்டுகிறது. தேர்தல் முடிவுகளையொட்டி ஒரேயொரு கருத்துக் கணிப்பு மட்டுமே அமைந்துள்ளது.

 

தமிழகத்தில் யார் யாருக்கு எவ்வளவு இடங்கள் கிடைக்கும் என்பது தொடர்பாக மே 19-ம் தேதி வெளியிடப்பட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு

 

டைம்ஸ் நவ்- வி.எம்.ஆர்

திமுக கூட்டணி 29

அதிமுக கூட்டணி 9

 

இந்தியா டுடே

திமுக கூட்டணி 34 - 38

அதிமுக கூட்டணி 0  -4

 

என்டிடிவி

அதிமுக கூட்டணி 11

திமுக கூட்டணி 26

மற்றவை 1

 

நியூஸ் எக்ஸ்- நேத்தா

 

திமுக 17

காங்கிரஸ் 3

அதிமுக- 8

பாஜக - 1

மற்றவர்கள் 9

 

சி.என்.என். நியூஸ் 18

திமுக கூட்டணி 22- 24

அதிமுக கூட்டணி 14-16

 

இந்தியா டிவி

திமுக 20

அதிமுக 10

காங்கிரஸ் 6

பாஜக 2

 

நியூஸ் 24- டுடேஸ் சாணக்யா

திமுக கூட்டணி 31

அதிமுக கூட்டணி 6

மற்றவை 1

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x