Published : 15 May 2019 07:46 AM
Last Updated : 15 May 2019 07:46 AM

மார்ச் 2017-க்கு முன்பு பெறப்பட்ட சிறு, குறு விசைத்தறியாளர்களின் மூலதன கடன் ரூ.65 கோடி தள்ளுபடி: சூலூர் பிரச்சாரத்தில் முதல்வர் பழனிசாமி உறுதி

சிறு, குறு விசைத்தறியாளர்கள் 31.03.2017-ம் தேதிக்கு முன்பு பெற்றுள்ள மூலதனக் கடன் தொகை ரூ.65 கோடி தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

கோவை மாவட்டம், சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சின்னியம்பாளையம், முத்துக் கவுண்டன்புதூர், வாகராயப் பாளையம் ஆகிய இடங்களில் அதிமுக வேட்பாளர் வி.பி.கந்த சாமியை ஆதரித்து முதல்வர் பழனிசாமி நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்

அப்போது அவர் பேசியதா வது: கைத்தறி நெசவாளர்களுக்கு 250 யூனிட் இலவச மின்சாரம், விசைத்தறி நெசவாளர்களுக்கு 750 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் மாநிலம் தமிழ்நாடு. நெசவாளர்களின் நலன் காக்கும் வகையில் சிறு, குறு விசைத்தறியாளர்கள் 31.03.2017-ம் தேதிக்கு முன்பு பெற்ற மூலதனக் கடன் தொகை ரூ.65 கோடி தள்ளு படி செய்யப்படும்.

இதேபோன்று, கைத்தறி, விசைத்தறி நெசவாளர்கள், நெசவாளர் வீடு கட்டும் கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் வீடு கட்ட பெற்ற கடன் தொகை, வட்டி, அபராத வட்டி முழுவதும் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுக அரசு நெச வாளர்களை பாதுகாக்கும் அரசு.

தற்போது சட்டமன்றத்தில் 88 திமுக உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் யாரும் என்னைச் சந்தித்து தொகுதி மக்கள் சார் பாக எந்த கோரிக்கையையும் வைத்ததில்லை.

அவ்வாறு இருக்கும்போது அவர்களால் தொகுதிக்கு என்ன செய்ய முடிந்தது. திமுக பொய் யான தேர்தல் அறிக்கையை வெளியிட்டு மக்களைக் குழப்பு கிறது. ஆனால் அதிமுக சார்பில் அளிக்கப்படும் அனைத்து வாக் குறுதிகளும் நிச்சயம் நிறை வேற்றப்படும்.

திமுகவால் நன்மையில்லை

திமுக தலைவர் ஸ்டாலின், டிடிவி.தினகரன் ஆகியோர் இங்கு பிரச்சாரம் செய்துள்ளனர். ஆனால், மாநிலத்தை ஆளும் அதிமுக சார்பில் நிற்கவைக்கப்பட்டுள்ள வேட்பாளர் வெற்றி பெற்றால் தானே, மக்கள் கோரிக்கைகள் நிறைவேறும். திமுக வெற்றி பெற்றால், அவர்களது எம்எல்ஏ கணக்கு கூடுமே தவிர, மக்களுக்கு எந்த நன்மையும் இருக்காது.

ஆட்சிக்கும், கட்சிக்கும் நெருக்கடி ஏற்படுத்தியவர் தினகரன். அந்த நெருக்கடிகளை முறியடித்துள்ளோம். திமுகவுடன் ரகசிய உடன்பாடு வைத்து, அதிமுகவை வீழ்த்தப் பார்க்கிறார் தினகரன். அவருக்கு தக்க பாடம் கற்பிக்க வேண்டும்.

தினகரனும், ஸ்டாலினும் உடன் பாடு வைத்துக் கொண்டிருக்கின்ற னர். அதைத்தான் தங்க தமிழ்ச் செல்வன் தெரிவித்தார். திமுக, அமமுக இரண்டுமே தொடர்பு வைத்துக் கொண்டு, அதிமுகவை வீழ்த்தப் பார்க்கின்றனர்.

திமுக குடும்பத்துக்காக உருவாக்கப்பட்ட இயக்கம். அது கட்சியல்ல, கம்பெனி. ஜெய லலிதா மறைவுக்குப் பின்னர் ஆட்சியில் அமரத் துடித்தார் ஸ்டாலின். ஆனால், அது நிறை வேறவில்லை. அந்த ஆதங்கத்தால் பல பொய்களைப் பேசி வருகிறார்.

மக்களுக்கு நல்லது செய் யாமல், எந்தக் கட்சியும் ஜெயிக்க முடியாது. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக உள்ளது.

அத்திக்கடவு-அவிநாசி திட்டம்

இப்பகுதி விவசாயிகளின் 60 ஆண்டுகால கோரிக்கையான அத்திக்கடவு-அவிநாசி திட்டம் ரூ.1,652 கோடி செலவில் நிறை வேற்ற அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் மூலம் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் பயன் பெறுவார்கள். கௌசிகா நதிப் பாதையில் உள்ள கழிவுநீரை `சம்ப் சிஸ்டம்’ மூலம் சுத்திகரித்து, அதை வெளிக்கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.

மக்களவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்னர் கருணாநிதி சிலை திறப்பு விழா நடைபெற்றது. அந்த விழாவில் பேசிய ஸ்டாலின், பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை அறிவித்தார். ஆனால், சந்திரபாபு நாயுடு உட்பட யாரும் அதை ஏற்கவில்லை.

ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்த ஸ்டாலின், தற்போது மூன்றாவது அணிக்காக முயற்சிக்கும் சந்திரசேகர ராவை, கொல்லைபுறம் வழியாக சந்திக் கிறார். மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றால்தானே மூன் றாவது அணி அமையும். நல்ல முடிவை அறிவிக்க மக்கள் தயாராகி விட்டனர். ஸ்டாலின் கனவு ஒருபோதும் பலிக்காது. இவ்வாறு முதல்வர் பேசினார். அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உடனிருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x