Published : 28 May 2019 01:54 PM
Last Updated : 28 May 2019 01:54 PM

அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பை திமுக முன்னெடுக்குமா? - ஸ்டாலின் பதில்

அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பை திமுக முன்னெடுக்குமா என்ற கேள்விக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (செவ்வாய்க்கிழமை) சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

தற்போது 101 சட்டப்பேரவை உறுப்பினர்கள் கொண்ட பெரும்பான்மை மிகுந்த எதிர்க்கட்சியாக திமுக இருக்கின்றது. இதன்பிறகு உங்களின் செயல்பாடு சட்டப்பேரவையில் எந்த மாதிரி இருக்கும்?

சட்டப்பேரவை கூடுகின்ற போது நாங்கள் எப்படி செயல்படுகின்றோம் என்பதை நீங்கள் நேரடியாக பார்க்கப் போகின்றீர்கள்.

சபாநாயகர் மீது திமுக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தது. அந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம், சபாநாயகர் மீது எடுத்துக்கொள்ளப்படுவதற்கு மீண்டும் உறுதியாக இருக்கின்றீர்களா?

பொறுத்திருங்கள். திரையில் காட்சிகள் வரும்.

நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய அரசுக்கு எதிரான தீர்மானமான, நம்பிக்கை வாக்கெடுப்பை திமுக முன்னெடுக்குமா?

சட்டப்பேரவை தேதி இன்னும் அறிவிக்கவில்லை. அறிவித்த பிறகு அதுகுறித்து நாங்கள் முடிவெடுப்போம்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x