Last Updated : 25 Apr, 2019 12:00 AM

 

Published : 25 Apr 2019 12:00 AM
Last Updated : 25 Apr 2019 12:00 AM

குமரி மக்களவைத் தொகுதி வாக்காளர் பட்டியலில் 10 ஆயிரம் பெயர்கள் மட்டும் நீக்கம்: விதிமுறைப்படியே நடந்ததாக தேர்தல் அலுவலர்கள் அறிக்கை

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி வாக்காளர் பட்டியலில் 30ஆயிரம் முதல் 40 ஆயிரம் பெயர்கள் நீக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இவ்விவகாரம் குறித்து அறிக்கை அளிக்க மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரேவுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற பணிகளில் ஈடுபட்ட வட்டாட்சியர் நிலையிலான அலுவலர்கள் புகாருக்குள்ளான தூத்தூர், இனயம் உள்ளிட்டபகுதிகளில் ஆய்வில் ஈடுபட்டனர்.

இதுகுறித்த அறிக்கை, பெயர் பட்டியல் மற்றும் ஆதாரங்களுடன் மாநிலதலைமை தேர்தல் அதிகாரியிடம்சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள விவரங்கள் குறித்து தேர்தல் துறை வட்டாரங்கள் கூறியது: 2018 செப்.1-க்கு பின்னர் குமரி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல்படி 14.47 லட்சம் வாக்காளர்கள் இருந்தனர். திருத்தப் பணிக்கு பிறகு இந்த ஆண்டு ஜன.31-ல் வெளியான இறுதி வாக்காளர் பட்டியலில் 30 ஆயிரம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு 14.77 லட்சம் வாக்காளர்கள் இருந்தனர்.

பட்டியல் திருத்த பணியின்போது 7,671 மற்றும் துணைப் பட்டியல் வெளியானபோது 2,371 என மொத்தம் 10,042 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. தேர்தல் விதிமுறைப்படி மரணம், இரட்டை பதிவு ஆகிய பெயர்கள் மட்டுமே அகற்றப்பட்டன. 40 ஆயிரம் பெயர்கள் நீக்கம் எனக் கூறுவது தவறான தகவல் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x