

சிவகங்கை களத்தில் நிற்கும் கார்த்தி சிதம்பரத்துக்காக இந்த முறை அவரது மனைவி ஸ்ரீநிதியும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வாக்குப் பதிவுக்கு முன்பாக கார்த்திக்காகவும் எச்.ராஜாவுக்காகவும் அலைபேசி வழியாகவும் வாக்குக் கேட்டார்கள்.
இதில் ஸ்ரீநிதி இன்னும் ஒருபடி மேலே போய், தமிழ் புத்தாண்டு அன்று வாக்காளர்களுக்கு அலைபேசி வழியாக புத்தாண்டு வாழ்த்துச் சொல்லி வாக்குக் கேட்டார்.
தனது பிரச்சார பயணத்தை பிள்ளையார்பட்டியில் விநாயகர் சன்னிதியிருந்து தொடங்கிய கார்த்தி, நிறைவுநாள் பிரச்சாரத்தை குன்றக்குடியில் முருகன் சன்னிதியில் நிறைவு செய்தது குறிப்பிடத்தக்கது.