

திருச்சி தொகுதியில் அமமுக வேட்பாளராகப் போட்டியிடும் சாருபாலா தொண்டைமான், தனிப்பட்ட முறையில் சர்வே ஒன்றை எடுத்திருக்கிறார்.
‘புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிகளில் அதிக கவனம் செலுத்தினால் ஓரளவுக்கு வெற்றி இலக்கை எட்டிப்பிடிக்க முடியும்’ என்று சொன்னதாம் சர்வே ரிப்போர்ட்.
இதையடுத்து தனது மகள் ராதா நிரஞ்சனியை அந்தத் தொகுதிகளுக்கு பிரச்சாரத்துக்கு அனுப்பியிருக்கிறார் சாருபாலா.
“ராணிக்கு வாக்குக்கேட்டு எங்கள் இளவரசி வருகிறார்” என்று அமமுகவினர் முன்னுரை கொடுக்க, “எங்ககிட்ட இல்லாத பணமா... நாங்கள் வகிக்காத பதவியா? இருந்தாலும் ஏன் நாங்கள் தேர்தலில் நிற்கிறோம் என்றால், நமது சமஸ்தானத்து மக்களுக்கு ஏதாவது நல்லது செய்யவேண்டும் என்பதற்காகத்தான்” என்று இளவரசி பிரச்சாரம் செய்வதை புதுக்கோட்டை சமஸ்தானத்து மக்கள் நன்றாகவே ரசிக்கிறார்கள்.