Published : 30 Apr 2019 09:05 AM
Last Updated : 30 Apr 2019 09:05 AM

ஓட்டப்பிடாரத்தில் மனுதாக்கலின்போது மழை: போலீஸாருடன் வேட்பாளர்கள் வாக்குவாதம்

ஓட்டப்பிடாரம் தொகுதிக்கான மனுதாக்கலின் போது மழை பெய்ததால், வட்டாட்சியர் அலுவலகத்துக்குள் உடனடி யாக அனுமதிக்க கோரி வேட் பாளர்கள் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள். இதனால் ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வாகனங்கள் 200 மீட்டருக்கு அப்பாலும், வேட்பாளர் உட்பட 5 பேரை தவிர மற்றவர்கள் 100 மீட்டருக்கு அப்பாலும் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இந்நிலையில் ஓட்டப்பிடாரத் தில் மதியம் சுமார் 1.30 மணிக்கு மேல் திடீரென பலத்த இடி மின்ன லுடன் மழை பெய்தது. அப்போது அமமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்ய வந்தனர். அதேநேரத்தில் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் மனு தாக்கல் செய்து கொண்டிருந் ததால், வட்டாட்சியர் அலுவலக வளாகத்துக்குள் யாரையும் போலீஸார் அனுமதிக்கவில்லை.

மழை அதிகரிக்கவே, தங்களை உடனடியாக உள்ளே அனுமதிக்க வேண்டும் என வேட் பாளர்கள் உள்ளிட்டோர் போலீ ஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடு பட்டனர். அவர்களிடம் ஏடிஎஸ்பி பொன்ராம் பேச்சுவார்த்தை நடத்தினார். தேர்தல் நடத்தும் அலுவலர் உத்தரவின்றி யாரையும் உள்ளே அனுமதிக்க முடியாது எனக் கூறினார்.

எங்களுடன் நாங்கள் கொண்டு வந்த ஆவணங்களும் மழையில் நனைகிறது என வேட்பாளர்கள் தெரிவித்தனர். இதனால் வேட்பாளர்களை மட்டும் வட்டாட்சியர் அலுவலக வளாகத்துக்குள் போலீஸார் அனுமதித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x