Published : 16 Apr 2019 09:43 PM
Last Updated : 16 Apr 2019 09:43 PM

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தாரா முதல்வர் பழனிசாமி?- அதிமுக விளக்கம்

சேலத்தில் பிரச்சாரம் செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெண் வாக்காளர் ஒருவருக்கு பணம் கொடுக்கும் காட்சி வைரலாகி வர அதை அதிமுக தரப்பு மறுத்துள்ளது.

இறுதிக்கட்டப் பிரச்சாரம் தமிழகம் முழுவதும் இன்று அரசியல் தலைவர்களால் நடத்தப்பட்டது. இதில் ஸ்டாலின், கமல், சீமான், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் சென்னையிலும், எடப்பாடி பழனிசாமி சேலத்திலும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

சேலத்தில் வீதிவீதியாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. வேட்பாளருடன் வீதிவீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார். அப்போது ஒரு பெண்ணுக்கு நோட்டீஸ் கொடுத்து வணக்கம் சொல்வார். அதன்பின்னர் பின்னால் தொண்டர் ஒருவர் கொடுக்கும் ரூபாய் தாளை வாங்கி அந்தப் பெண்ணிடம் வழங்குவார்.

இந்தக் காணொலி வெளியாகி வைரலானது. முதல்வரே வாக்குக்குப் பணம் கொடுக்கிறார், கனிமொழி எப்போதோ தேர்தலுக்கு முன் ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு பணம் கொடுத்ததை புகார் அளித்து அதை தேர்தல் ஆணையம் விசாரிக்காமல் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது.

ஆனால் தற்போது முதல்வர் தேர்தல் பிரச்சாரத்தில் வாக்காளருக்கு பகிரங்கமாக பணம் கொடுக்கிறார் இதன்மீது என்ன நடவடிக்கை என்று திமுக தரப்பில் கேள்வி எழுப்பினர்.

காணொலி வைரலானதை அடுத்து தற்போது அதிமுக தரப்பில் அக்கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதில், ''அன்புடன் வாழைப்பழம் கொடுத்த அக்காவிற்கு, அதற்கான பணத்தைக் கொடுக்கிறார் முதல்வர். திமுக டீ குடித்தால் கூட பணம் கொடுக்காமல் அடித்து அராஜகம் செய்யும் நிலையில், விவசாயிகளின் நண்பராக நடந்து கொண்டதை ஓட்டுக்குப் பணம் கொடுத்தார் என திசை திருப்புவது திமுகவின் கீழ்த்தரமான தேர்தல் பயமே'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x