Published : 04 Sep 2014 10:13 AM
Last Updated : 04 Sep 2014 10:13 AM

நடன பார்களுக்கு தடை?: மகாராஷ்டிர அரசுக்கு பரிந்துரை

ஹோட்டல்களில் நடன பார்களை முழுவதும் தடை செய்யவேண்டும் என்று மகாராஷ்டிர அரசுக்கு நீதிபதி தர்மாதிகாரி தலைமையிலான கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்கு, எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை பரிந்துரை செய்வதற்கு நீதிபதி தர்மாதிகாரி தலைமையிலான கமிட்டியை மகாராஷ்டிர அரசு அமைத்தது. அந்த கமிட்டி தனது நான்காவது மற்றும் ஐந்தாவது இடைக்கால அறிக்கைகளை மும்பை உயர் நீதிமன்றத்தில் தாக் கல் செய்துள்ளது.

இதில் ஹோட்டல்களில் நடன பார்களை முழுவதும் தடை செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. நடன பார்களை முழுமையாகத் தடை செய்துள்ள மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங் கள் குறைவாக உள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தில் 2005-ல் ஹோட்டல்களில் நடன பார்களுக்கு மாநில அரசு தடை விதித்தது. இதில் மூன்று மற்றும் ஐந்து நட் சத்திர ஹோட்டல்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. பிறகு இந்தத் தடை பாரபட்சமானது என்று கூறி உச்சநீதிமன்றம் 2012-ல் ரத்து செய்தது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரைகளை ஆராய்ந்து, புதிய சட்டம் இயற்று மாறு மகாராஷ்டிர அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கமிட்டியின் அறிக்கையில் பெண்கள் பாதுகாப்புக்காக 22 பரிந்துரைகள், 6 ஆலோசனைகள் இடம்பெற்றுள்ளன. “பேஸ் புக் போன்ற சமூக வலைத்தளங்கள் விவாகரத்துக்கும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கும் கார ணமாக அமைகின்றன. வலைத் தளங்கள் மூலமாக பெண்க ளுக்கு நடக்கும் கொடுமை கள் கண்காணிக்கப்படவேண்டும். இளைஞர்களிடம் வன்முறை உணர்வு தூண்டப்படுகிறது.

மேலும், திருமணத்தைப் பதிவு செய்கிறபோது பெண்ணிடம் வர தட்சணை வாங்கப்பட்டுள்ளதா என்று விசாரிக்கவேண்டும். திருமணத்தில் பெண்ணுக்கு வழங் கப்படும் பரிசுகளும் ரொக்கமும் அப்பெண்ணின் பெயரில் பாதுக் காக்கப்படுகிறதா என்பதையும் கண்காணிக்கவேண்டும். பெண்கள் பாதுகாப்புக்குரிய எல்லா சட்டங்களும் பின்பற்றப்பட வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x