இவ்வளவு ஆவேசமா? - தமிழகத்தில் ராகுல் பேச்சுக்கு எஸ்.வி.சேகர் கிண்டல்

இவ்வளவு ஆவேசமா? - தமிழகத்தில் ராகுல் பேச்சுக்கு எஸ்.வி.சேகர் கிண்டல்
Updated on
1 min read

தமிழகத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ள பேச்சை, தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டல் செய்துள்ளார் எஸ்.வி.சேகர்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தில் ஏப்ரல் 12-ம் தேதி சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டார். காலையில் கிருஷ்ணகிரியில் தொடங்கி மாலையில் மதுரையில் அவர் பிரச்சாரத்தை நிறைவு செய்தார். காங்கிரஸ் வேட்பாளர்களையும் திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களையும் அவர் ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

மதுரை பொதுக்கூட்டத்தில் பேசும் போது, ''தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அடிமைப்படுத்துவது போல் தமிழக மக்களை பிரதமர் மோடியால் அடக்க முடியாது.நாங்கள் தமிழக மக்களைக் கட்டுப்படுத்த நினைக்கவில்லை. நீட் தேர்வை அவர்கள் மீது திணிக்க விரும்பவில்லை. அனிதா எனும் தமிழ்ப் பெண்ணின் தற்கொலை பற்றி எங்களுக்கு சொல்லப்பட்டது. அதனாலேயே நாங்கள் நீட் தேர்வின் முடிவை தமிழகத்தின் கையில் தருகிறோம்” என்று தனது பேச்சில் குறிப்பிட்டார்.

இதனை பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டல் செய்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்பாக வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “முதல்வரை அடிமைப்படுத்துவதுபோல் தமிழக மக்களை அடக்க முடியாது: மதுரையில் ராகுல் காந்தி பேச்சு - சரிதான். ஒரு பிரதமரையே அடிமையாக, பேசா மனிதராக வைத்திருந்த இத்தாலி நாட்டவருக்கு இவ்வளவு ஆவேசமா” என்று தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in