Published : 12 Sep 2014 10:12 AM
Last Updated : 12 Sep 2014 10:12 AM

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அக். 15 முதல் விண்ணப்பிக்கலாம்

சுருக்கமுறை வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கான பயிற்சி வகுப்புகள் சென்னையில் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் தலைமையில் வியாழக்கிழமை நடந்தது.

தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தப் பணி வரும் அக்டோபர் 15 ம் தேதி தொடங்குகிறது. அப்போது பட்டியலில் பெயர் சேர்ப்பது, திருத்துவது, முகவரி மாற்றம் போன்ற பல திருத்தங் களை வாக்காளர்கள் செய்துகொள் ளலாம்.

இந்தப் பணியில் ஈடுபடும் தேர்தல் அதிகாரிகளுக்கான பயிற்சி வகுப்பு, சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடந்தது. மாவட்டத்துக்கு 2 அதிகாரிகள் (தாசில்தார், தலைமை பயிற்றுனர்) வீதம் மொத்தம் 64 பேர் பயிற்சி வகுப்பில் பங்கேற்றனர்.

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து பேசினார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

வரும் ஜனவரி 1-ம் தேதி 18 வயதை நிறைவு செய்வோர், தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க மனு செய்யலாம். இதற்காக அக்டோபர் 15 முதல் நவம்பர் 10-ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும். ஜனவரி 5 ல் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். புதிதாக விண்ணப்பிக்கும் வாக்காளர்களுக்கு வண்ண அடையாள அட்டை வழங் கப்படும்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலை யொட்டி புதிதாக சேர்க்கப்பட்ட 12 லட்சம் வாக்காளர்களுக்கான வண்ண வாக்காளர் அடையாள அட்டை தயாரிக்கும் பணி முடிவுறும் நிலையில் உள்ளது. இம்மாத இறுதியில் அவர்களுக்கு வண்ண அட்டைகள் வழங் கப்படும்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு, வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 50 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஒரு வாக்காளர் பெயர் 2 இடங்களில் இருந்தால் அதை கண்டுபிடித்து நீக்குவதற்காக புதிய சாப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரிகளுக்கு 2-வது கட்ட பயிற்சி வகுப்பு அடுத்த வாரம் தொடங்கும். இவ்வாறு பிரவீண்குமார் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x