Last Updated : 01 Apr, 2019 09:33 AM

 

Published : 01 Apr 2019 09:33 AM
Last Updated : 01 Apr 2019 09:33 AM

தேர்தலில் ஜனநாயகக் கடமையாற்றுங்கள்: பெற்றோர்களுக்கு நோட்டீஸ் மூலம் அறிவுறுத்தும் பள்ளிகள்

தேர்தலில் ஜனநாயகக் கடமை யாற்ற, மதுரையில் தனியார் பள்ளி நிர்வாகங்கள் சார்பில் மாணவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு பெற்றோரிடம் கையெழுத்து பெற்றுவரும்படி அறிவுறுத்தப்படுகிறது.

தேர்தலில் நல்ல பிரதிநிதியைத் தேர்வு செய்வது வாக்காளர்களின் ஜனநாயகக் கடமை. ஒவ்வொரு வரின் விரலிலும் கறை படிந்தால் தான், கறைபடியாத பிரதிநிதியை தேர்வு செய்ய முடியும். வாக்களிக்கத் தகுதியான அனைத்து குடிமகன்களையும் வாக்குச்சாவடிக்கு எப்படியாவது வரவழைக்க தேர்தல் ஆணையம் பகீரதப் பிரயத்தனம் செய்து வருகிறது.

நூறு சதவீத வாக்குப்பதிவு மூலம் நல்ல, படித்த வேட்பாளர்களை தேர்வு செய்ய முடியும் என்ற நோக்கில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. கல்லூரிகளில் வாக்குப்பதிவு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக நடத்திய நிலையில், தற்போது பள்ளிகள் மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மதுரையில் உள்ள டிவிஎஸ் பள்ளி உள்ளிட்ட சில தனியார் பள்ளிகளின் நிர்வாகங்கள் சார்பில் பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி தவிர ஒவ்வொரு வகுப்பிலும் உள்ள மாணவர்களிடம் ‘ பெற்றோரிடம் உறுதிமொழி ’ எனும் தலைப்பில் நோட்டீஸ் கொடுத்தனுப்பி உள்ளனர். அதில், ‘‘ ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட இந்திய குடிமக்களாகிய நாங்கள் எந்தவொரு ஜாதி, மத, இன, வகுப்பு மற்றும் மொழி பாகுபாட்டுக்கும் ஆட்படாமல் ஏப். 18-ல் நடக்கும் மக்களவைத் தேர்தலில் வாக்களிப்போம், ஜனநாயகக் கடமையைக் கட்டாயம் செய்வோம் என உறுதி ஏற்கிறேன்,’’ இவ்வாறு குறிப்பிடப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸில் கையெழுத்து பெற்று வரும்படி மாணவர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

இந்த உத்தியால் மாணவர்களும் அரசியல், தேர்தல் பற்றி அறிந்து கொள்வதோடு, ஜனநாயகக் கடமையை எதிர்காலத்தில் சரியாகச் செய்வதற்கு உந்துதலாக அமையும் என பள்ளி நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x